Followers

Monday, March 11, 2013

பூர்வ புண்ணியம் 43



வணக்கம் நண்பர்களே!
                     ஒருவரிடம் சென்று இந்த வாழ்க்கையில் நீங்கள் செய்த சாதனை என்ன என்று கேட்டாள்? உடனே சொல்லுவார் நான் ஒரு நல்ல வேலையில் இருந்தேன் எனக்கு மகன் அல்லது மகள் நல்ல இடத்தில் வாழ்க்கிறார்கள். எனக்கு நல்ல வீடு இருக்கிறது கவனித்துக்கொள்ள அன்பான மனைவி இருக்கிறாள் கொஞ்சி கொள்வதற்க்கு பேரகுழந்தைகள் இருக்கிறது பென்சன் பணம் வந்துக்கொண்டுருக்கிறது. நிலம் இருக்கிறது இப்படி பலவிதத்தை சம்பாதித்து வைத்திருக்கிறேன் என்பார்கள். சரி இந்த வாழ்க்கைக்கு அனைத்தையும் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் நீங்கள் போகின்ற ஊருக்கு எதனை சேர்த்து வைத்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு அவரிடம் ஒரு பதிலும் வராது. இதே மாதிரி தான் அனைவரும் இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் தன்னைப்பற்றி இந்த உலகத்தைப்பற்றி தெரிந்து வைத்திருக்கிறான் ஆனால் நான் யார் என்பதை மட்டும் இவன் அறிந்துக்கொள்ள நினைப்பதில்லை. எவன் ஒருவன் தன்னைப்பற்றி அறிகிறானோ அவன் தான் கடவுளைப்பற்றியும் அறிவான். தன்னை அறிந்தவனே தலைவனை அறிவான் என்பார்கள். உங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள தான் இந்த பூர்வபுண்ணியத்தொடரை எழுத ஆரம்பித்தேன். உங்களைப்பற்றி தெரிந்து ஆத்மாவை பற்றி அறியும்போது மட்டுமே நீங்கள் வந்த வேலை என்ன என்பது தெரியும். 

நான் உங்களின் முன்ஜென்மத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்புக்கொடுத்து அதன் மூலம் உங்களின் முன்ஜென்மத்தில் உள்ள நபர்களை நீங்கள் அறியும்போது இந்த சமுதாயத்தில் பல மாற்றங்கள் வரும் என்பதாலும் இதனை எழுதியுள்ளேன். அனைவரும் ஒரே குட்டையில் ஊருன மட்டை என்பது தெரியவரும். நீங்கள் தெரிந்து தெரியாமல் கூட அடு்த்தவர்களுக்கு பாவத்தை செய்யவேண்டும் என்ற எண்ணம் வராது.

ஒரு மனிதன் தனியாக தான் பிறக்கிறான் தனியாக தான் வளர்கிறான் தனியாக தான் வாழ்கிறான் தனியாக தான் போய் சேருகிறான். இடையில் வந்த சொந்தங்களை இவன் பிரிவதற்க்கு இவனுக்கு மனம் வரமாடடேன்கிறது. அந்த நல்ல மனதுடன் முன்ஜென்மத்தின் உறவினர்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்பதை நான் சொல்லுகிறேன். அது ஆத்மாவிற்க்கு பேருதவியாக இருக்கும். 

முன்ஜென்மத்தில் ஒரு மனிதனுக்கு நீங்கள் அந்தளவுக்கு கெடுதல் செய்யும்போது அதன் கர்மா நம்மை இந்த பிறவியில் கடுமையாக தாக்குகிறது. ஒரு சிலர் திருமணம் செய்திருப்பார்கள் திருமணம் செய்த நாள்களிலிருந்து இருவருக்கும் சண்டை சச்சரவுடன் தான் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்கும். 

நேற்று முன்தினம் ஒரு நண்பர் என்னை சந்திக்க வந்திருந்தார் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சண்டையில் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இருவருக்கும் இடையில் பெரிய பிரச்சினை கிடையாது ஆனால் பிரிவு ஏற்படுத்திக்கொண்டு அந்த பெண் இவரை அந்தபாடு படுத்திக்கொண்டு இருக்கிறார். 

இவர் விவாகாரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாலும் அந்த பெண் அதனை வாங்கவில்லை. என்னை சந்திக்கும்போது சொன்னார் அவரின் கிரகநிலையை ஆராய்ந்து பார்க்கும்போது முன்ஜென்மத்தில் அந்த பெண்ணிற்க்கு இவர் கெடுதல் செய்திருக்கிறார். அந்த பெண் இந்த ஜென்மத்தில் பலி வாங்குகிறாள். நான் பூர்வபுண்ணியம் எழுதியபிறகு ஒவ்வொருவரும் இதுவரை ஏன் சண்டை ஏற்பட்டு வந்தது என்பதை அறிந்துக்கொண்டுவிட்டார்கள்.

உங்களின் ஜாதகத்தில் தேடினால் அனைத்திற்க்கும் விடைகிடைக்கும். ஒரு விதையிலிருந்து பல விதைகள் உருவாவது போல ஒரு பாவத்தில் இருந்து பல பாவங்கள் உருவாகின்றன. 

முன்ஜென்ம பாவகணக்கை குறையுங்கள். இந்த ஜென்மத்திலும் பாவம் செய்யாமல் வாழுங்கள். முன்ஜென்ம பாவகணக்கை குறைக்க உங்களின் முன்ஜென்மத்தில் உங்களுக்கு உறவாக இருந்தவர்களை தேடி அவர்களுக்கு  உதவி செய்யும்போது உங்களின் பாவகணக்கு குறையும்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: