Followers

Monday, March 25, 2013

பூர்வ புண்ணியம் 46



வணக்கம் நண்பர்களே!
                    பகவத்கீதையில் மனித பிறப்பைப்பற்றி என்ன கிருஷ்ணர் சொல்லியுள்ளார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மனிதபிறவி என்பது மிகவும் அரிது. மிகவும் புண்யம் செய்திருந்தாலும் கூட பகவானுடைய க்ருபையின்றிக் கிடைக்காது. அப்படி கிடைத்தது கூட பகவானை அடைவதற்க்காகதான். இந்த அருமையான மனிதப் பிறவியைப் பெற்று மனித வாழ்க்கையின் பயனை அடையாமல் அதை இழந்துவிடுகிறான். பகவானை அடைவதற்க்காக சாதனை புரிபவருக்காக தான் மனிதப் பிறவி பயனுள்ளதாகிறது. 

புலன்கள் மூலம் அடையும் இன்பங்களைப் பெறுவது மனிதன் சுகம் என்ற நினைத்துவிட்டால் பிறகு திரும்ப திரும்ப பற்பல பிறவிகளில் பிறந்து கஷ்டத்தை அனுபவிக்கவேண்டியது தான். திரும்ப திரும்ப பிறவிகள் எடுப்பது மிகப்பெரிய துன்பமாகிவிடும். 

எந்த லட்சியத்திற்க்காக மனிதப்பிறவி கிடைத்ததோ அந்த லட்சியத்தை நிறைவேற்றி கொண்டுவிடவேண்டும். இந்த உடல் நொடியில் அழிவது காலதாமதம் செய்தால் லட்சியம் ஈடேறாது. அதனால் சுகம் தான் வாழ்க்கை என்று நினைத்துவிடாமல் அவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். கவனக்குறைவினால் இந்த மனித ஆயுள் வீணாகிவிட்டால் பிறகு நொந்து பயனில்லை. இந்த மனிதப்பிறவியில் பரமாத்மாவை அறிந்து கொண்டுவிட்டால் நன்று. அறியாவிட்டால் மிகப்பெரிய இழப்பு என்கிறார்.

இந்த கர்மாவை நீங்கள் தொலைக்க வேண்டும் என்றால் முன்ஜென்மத்தில் நீங்கள் பிறருக்கு செய்த குற்றத்திற்க்காக அவர்களுக்கு நல்லதை செய்து அவர்கள் மூலம் நீங்கள் பரம்பொருளை அடையவேண்டும்.

நீங்கள் எடுத்த மனிதப்பிறவியை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும். காலம் கடந்த ஞானம் தவறுதலை உண்டாக்கிவிடும். காலம் போனபிறகு பக்தி அது இது என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் அது வீணான ஒன்று. உங்களுக்கு மனிதப்பிறப்பு கிடைத்தால் அது அதிசயத்திலும் அதிசயம். மனிதப்பிறப்பு போல் வேறு எந்த பிறப்பும் சிறப்பாக அமையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: