Followers

Thursday, March 21, 2013

ஆன்மீக அனுபவங்கள் 78



வணக்கம் நண்பர்களே !
                     நேற்று என்னுடன் பேசிய நண்பர் ஒருவர் சொன்னார் நீங்கள் எழுதும் தகவல் எப்படி எடுக்கிறீர்கள் உங்களுக்கு எப்படி எல்லாம் தகவல் கிடைக்கிறது. அதுவும் பூர்வபுண்ணியத்தில் நீங்கள் சொல்லும் தகவல் வேறு எந்த புத்தகத்திலும் இல்லை பின்பு எப்படி இது சாத்தியப்படுகிறது என்று கேட்டார்.

நண்பர்களே எனக்கு கிடைக்கும் தகவல் அனைத்தும் எங்கு இருந்து வருகிறது என்பது எனக்கு தெரியாத ஒன்று தான். இந்து மதத்தின் ஆணிவேர் என்ன என்று சிந்தித்தபொழுது உதித்த எண்ணம் தான் கர்மவினை. இந்த கர்மவினையை தீர்ப்பதற்க்கு தான் மனித பிறப்பு எடுக்கிறது என்பதை நான் படித்தவிசயங்களுடன் என்னுடைய அனுபவத்தையும் வைத்து தெரிந்துக்கொண்டேன். அதனை செயல்படுத்தி உங்களுக்கு தரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

ஒரு மனிதனுக்கு நீங்கள் இழைக்கும் துரோகம் நீங்கள் செய்யும் பாவம் கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் நீங்கள் பட்டு தான் ஆகவேண்டும் என்று இந்து மதம் சொல்லுகிறது. கண்டிப்பாக இங்கு மன்னிப்பு என்பது கிடையாது. இன்று ஒரு அரிவாளை எடுத்து இன்னொருத்தனை நீ கையை வெட்டினால் இந்த ஜென்மத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் நீ கண்டிப்பாக அதைப்போல் வெட்டப்படுவாய்.

ஏன் நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது. நாம் யாருக்கும் தெரிந்தவரை தவறு செய்யவில்லை ஆனால் நமக்கு மட்டும் இப்படி தொடர்ந்து கஷ்டம் வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அது எதற்கு உங்களுக்கு மட்டும் நடக்கிறது என்றால் உங்களின் ஆத்மா கர்மவினையை தாங்கிக்கொண்டு இந்த உடலை எடுத்துள்ளது. 

முன்ஜென்மத்தில் நீங்கள் செய்த நல்லது தீயது அனைத்தையும் தாங்கி இந்த ஜென்மத்தில் உங்களுக்கு நடக்கும் செயல் தீர்மானிக்கப்படுகிறது. இதனைப்பற்றி தெரிந்துக்கொள்ள தான் சோதிடமே. நான் சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்ள நீங்கள் ஒரு பத்து நிமிடம் அமர்ந்து சிந்தனை செய்து பார்த்தால் நீங்கள் தெரிந்துக்கொள்ள முடியும்.

நான் சொல்லுவது அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் சிந்திக்கும்போதே தெரிந்துக்கொள்வீர்கள். இதனை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன அதனால் தான் எந்த ஆன்மீகவாதியும் இந்த பக்கம் சாய்ந்து கூட படுப்பதில்லை. இதனை செயல்படுத்தினால் அவர்களால் உங்களை வைத்து குப்பைக்கொட்டிக்கொண்டு இருக்கமுடியாது. 

நீங்கள் என்ன செய்வீர்கள் முன் ஜென்மத்தில் இவருக்கு தான் நான் கெடுதல் செய்தேன். இந்த ஜென்மத்தில் அவருக்கு நான் நல்லது செய்ய போகிறேன். அது ஒன்றும் தான் எனக்கு இருக்கும் கடமையிலேயே மிகப்பெரிய கடமை என்று சொல்லிக்கொண்டு போய்விட்டால் பின்பு யாரை வைத்து குப்பைக்கொட்டுவது அதனால் தான் அதனை மறைத்துவிட்டு மீதி இருக்கும் விசயங்களை உங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள்.

உங்களின் கர்மவினையை குறைப்பதற்க்கு உள்ள வழிகளை சொல்லி நீங்கள் ஆன்மீகத்திலும் முன்னேற்றம் அடைந்து அந்த பரம்பொருளிடம் செல்லவேண்டும் என்பது என்னுடைய சிறிய எண்ணம்.

இந்த நல்ல செயலில் நீங்களும் பங்குக்கொள்ளுங்கள். எப்படி பங்குக்கொள்வது நமது தளத்தின் முகவரியை உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் அது ஒன்று போதும். 

தமிழர்கள் குறைந்தது 7 கோடி பேர்கள் இருக்கிறார்கள் அவர்களில் 300 பேர்க்கு இதனை படிக்கும் பாக்கியம் கி்டைத்திருக்கிறது. இதுவே உங்களின் ஆத்மா புண்ணியம் செய்திருக்கிறது என்று தான் அர்த்தம். இந்த தளத்தை படிக்கும் வாய்ப்பை உங்களுக்கு இறைவன் அளித்திருக்கிறான் என்று எடுத்துக்கொண்டு அந்த வாய்ப்பை அடுத்தவர்களுக்கும் வழங்குங்கள்.

நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் சென்றுக்கொண்டே இருக்கிறது. சென்ற நேரத்தைப்பற்றி கவலைக்கொள்ளாமல் இருக்கும் நேரத்தையாவது செயல்படுத்த பார்த்தால் நீங்கள் மனிதப்பிறப்பை எடுத்ததின் நோக்கம் நிறைவேறும்.

இன்று எத்தனையோ சாமியார்கள் உங்களுக்கு யோகா தியானம் பலவித ஆன்மீகத்தை உங்களுக்கு கற்று தந்திருக்கலாம் அவர்களே பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் கர்மாவின் வினையை அவர்கள் தீர்க்கவில்லை என்று தான் அர்த்தம். அவர்களின் கர்மவினை அவர்களை துரத்துகிறது. கர்மவினை தீர்க்கமுடியாத ஆன்மீகம் ஆன்மீகமாக இருக்க முடியாது. 

மரணம் உன்னை நெருங்குவதற்க்கு முன்பு உன் கர்மவினையை நீ தீர்த்துக்கொள். நீங்கள் சேர்த்து வைக்கும் எதுவும் உங்களின் பின்பு வராது. நீங்கள் செய்த கர்மா தான் உங்களை பின் தொடரும்.தொடரும்.தொடரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: