Followers

Saturday, March 2, 2013

சனிக்கு எளிய பரிகாரம்



வணக்கம் நண்பர்களே!

இன்று சனிக்கிழமை சனி பகவானுக்கு ஒரு பரிகாரத்தை சொல்லிவிடலாம் என்று மனது நினைத்தது உடனே அதனை செய்துவிடலாம் என்று முதல் பதிவாக அதனை வெளியிடுகிறேன்.

சனியின் தொல்லையில் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு பல்வேறு பரிகாரங்கள் சோதிடர்களால் சொல்லப்பட்டு வருகிறது. நாமும் சோதிடர் என்பதால் என்னால் முடிந்த ஒரு புது பரிகாரத்தை சொல்லுகிறேன் செய்து பாருங்கள். சனிக்கு காலபைரவரை வணங்குங்கள் என்று சொல்லிவருகிறார்கள். நானும் சொல்லியுள்ளேன். காலபைரவர் இப்பொழுது தான் தமிழ்நாட்டிற்க்கு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இவர் வடஇந்தியாவில் பிரபலம். இப்பொழுது தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கிறார். 

தமிழனிடம் எனக்கு பிடித்த விசயத்தில் இதுவும் ஒன்று. பக்கத்துவீட்டுகாரனை இவன் நம்பமாட்டான் எங்கேயே இருக்கின்றவனை நம்புவான். பக்கத்துவீட்டுக்காரனுக்கு சாப்பாடு போடமாட்டான் எங்கேயே இருக்கின்றவனை கூப்பிட்டு விருந்து கொடுப்பான் அதைப்போல் தான் இந்த காலபைரவரும். இவர் வடஇந்தியாவில் இருந்தார் இவரை இப்பொழுது தமிழ்நாட்டில் கொண்டுவந்து பிரபலமாக்கிவிட்டோம். சரி நான் விசயத்திற்க்கு வருகிறேன்.

சனிக்கு என்னால் முடிந்த ஒரு பரிகாரத்தை சொல்லிவிடுகிறேன். சனியின் பிடியில் இருந்து தப்பிக்க சாஸ்தாவை வழிப்பட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். சாஸ்தாவை எங்கே போய் வணங்குவது என்று கேட்கிறீர்களா அதான் ஊருக்கு ஊரு ஐயனார் இருக்கிறாரே அவரை வணங்குங்கள். ஐயனாரை வணங்கினால் சனியின் தொல்லையில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம். 

அதிகபட்சமாக அய்யனார் வீரனார் கோவில்களை பார்த்தால் ஊருக்கு வெளியில் அமைத்து இருப்பார்கள். இந்த கோவில்களில் தலவிருச்சமாக சனிக்கு உரிய பனைமரம் இருக்கும். நீங்கள் தேடிபாருங்கள் அதிகபட்சம் இப்படி தான் இருக்கும். 

சனி கிரகம் கிராம தெய்வங்களை காட்டுபவர் அதனால் இவரை வணங்கி நீங்கள் சனியின் பிடியில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம். அதைப்போல் அய்யனார் வீரனார் போன்ற தெய்வங்களை வணங்கும்போது உங்களின் செல்வவளமும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

எப்படி செல்வவளம் முன்னேற்றம் அடையும் என்று சொல்லுகிறீர்கள்?

இந்த தெய்வங்களுக்கு வாகனமாக குதிரையை வைத்திருப்பார்கள். அந்த குதிரையை பார்த்தால் பாதுகாப்புக்கு உரிய குதிரை போல் இருக்காது. ராஜஅலங்காரம் செய்யப்பட்ட குதிரைப்போல் இருக்கும். அந்த காலத்தில் ராஜஅலங்கார குதிரையில் வருபவர்கள் ராஜாக்கள் தான். இவர்களின் குடும்பம் அரச குடும்பம். அரசனை பிடித்தால் நமக்கு ஏன் கஷ்டம் வரபோகிறது. அதனால் அப்படி சொன்னேன்.

சில இடங்களில் பார்த்தீர்கள் என்றால் வேட்டைக்காரன் போல் குதிரை நாயுடன் இருப்பார்கள். ராஜாக்களுக்கு பொழுதுபோக்கு வேட்டையாடுவது அல்லவா அதனால் அப்படி இருப்பார்கள்.

நீங்கள் சொல்லவதை நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா?

உங்களின் ஜாதகத்தை எடுத்து பாருங்கள் அதில் ஐந்தாம் வீடு சனி அமர்ந்தால் அல்லது சனியின் ராசியாக வந்தால் ஐந்தாம் வீட்டை சனி கிரகம் பார்த்தால் உங்களின் குலதெய்வம் சாஸ்தாவாக இருக்கும். உங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை என்றால் உங்களின் தந்தையாரின் பூர்வீகத்தை எடுத்து பார்த்தால் அவரின் சொந்த ஊரில் சாஸ்தா இருப்பார். சனி கிரகத்திற்க்கு ஒரு நல்ல பரிகாரத்தை சொல்லியுள்ளேன் செய்து பாருங்கள்.

காலபைரவரை விட்டுவிடலாமா என்று கேட்கிறது புரிகிறது அவரையும் வணங்குங்கள் காலபைரவர் காவல் காப்பவர். காவல்காரனை வீட்டின் வெளியில் நிறுத்தலாம் வீட்டுக்கு உள்ளே நிறுத்தினால் உங்களை என்று போட்டுதள்ளுவான் என்று சொல்லமுடியாது. வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும். ஒரு அளவோடு வணங்கி வாருங்கள்.

உனக்கு திமிரு ஜாஸ்தியா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. என் மூளை இப்படி வேலை செய்கிறது அதனால் உங்களுக்கு சொல்லுகிறேன். நீங்கள் வழிபாட்டை நடத்திவிட்டு என்னிடம் சொல்லுங்கள் அப்பொழுது உங்களுக்கு தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




2 comments:

KJ said...

Sir, sastha means ayyapan. Right sir?

rajeshsubbu said...

கேரளாவில் ஐயப்பன் தமிழ்நாட்டில் ஐய்யனார்