Followers

Thursday, March 21, 2013

சோதிட அனுபவம்



வணக்கம் நண்பர்களே !
                     நாம் ஐந்தாம் வீட்டைப்பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம் அதனுடன் ஒரு ஜாதகத்தையும்  சேர்த்து பார்க்கலாம்.

இவர் சென்னையில் பிறந்துள்ளார். பூச நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். இவருக்கு ஐந்தாவது வீட்டு தசா ஆரம்பம் ஆனது. ஆரம்ப வருடம் 2004. இவருக்கு சுக்கிரன் தசா ஆரம்பம் ஆனவுடன் நல்ல வேலை கிடைத்தது. நல்ல பன்னாட்டு கம்பெனியில் வேலையில் இருந்ததால் பணம் கொட்டியது. இவருக்கு சுயபுத்தியில் நல்ல வருமானம் கிடைத்தது. சுக்கிரன் தசா சுக்கிர புத்தி. சுக்கிரன் அமர்ந்த இடம் மூன்றாவது வீடாகிய மீனத்தில் அமர்ந்தார். 

மீனத்தில் சுக்கிரன் அமர்ந்து தசா நடத்தும்போது வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் பயணங்களும் ஏற்பட்டு சென்று வந்தார். ஐந்தாவது வீட்டிற்க்கும் சுக்கிரன் காரகம் வகிக்கிறார் அல்லவா. ஐந்தாவது வீடு காதலை தரும் வீடு அல்லவா. இவருக்கும் ஒரு பெண்ணிற்க்கும் காதல் ஏற்பட்டு இருந்தது. இவரோடு ஒரே கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணிடம் காதல் ஏற்பட்டு வந்தது. இவர்களின் காதல் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. 

தசா முடிவடைய ஒரு வருடங்களுக்கு முன்பு இருவரும் சண்டைப்போட்டுக்கொண்டு பிரிந்தார்கள். இவர் எவ்வளவு சமாதானம் செய்தும் அந்த பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டார்கள். 

பிரித்தது யார்?

மூன்றாவது வீட்டிற்க்கு எட்டாவது வீட்டிலிருந்து செவ்வாய் கிரகத்தின் பார்வைபடுகிறது அதனோடு ஒன்பதாவது வீட்டில் இருந்து சனி கிரகத்தின் பார்வைபடுகிறது. இருவரும் எப்பேர்பட்ட ஆட்கள். இவர்களின் காதல் முறிவில் இரத்தம் காயம் கூட ஏற்பட்டது என்றால் கிரகத்தின் பாதிப்பை பற்றி நீங்களே தெரிந்துக்கொள்ளலாம். 

என்னடா பெரிய கம்பெனியில் இருப்பவர்கள் இப்படி எல்லாம் சண்டைப்போட்டுக்கொள்வார்களா என்று நினைக்க தோன்றும். கிரகத்தின் பிடியில் மாட்டினால் அரசனையும் நாய்போல் அடித்துக் கொன்றுவிடும் நிலையை ஏற்படுத்தும். நீங்களே பார்த்திருக்கலாம் எத்தனையோ நாட்டில் அரசர்களை நடுவீதியில் நாயை அடிப்பது போல் அடித்துக்கொள்வதை பார்த்திருக்கலாம் அவர்களுக்கு எல்லாம் இந்த மாதிரி கிரக அமைப்பு இருக்கும்.

கிரகத்தைப்பொருத்தவரை அரசனும் ஆண்டியும் ஒன்று தான். யாரையும் விட்டுவைப்பதில்லை.

அடுத்த வந்த சூரியன் புத்தியில் பையன் மனதளவில் செத்துவிட்டான் என்று தான் சொல்லவேண்டும். சூரியன் எட்டாவது வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார் அல்லவா. எட்டாவது வீடு எப்படி இருக்கும் இறப்பை காட்டும் வீடு. உயிரோடு இருந்தாலும் பிணமாகதான் இருக்கிறான். 

எப்பொழுதுமே ஒரு தசாவின் சுயபுத்தியில் நமக்கு வரும் எதுவும் நிலைத்து நிற்க்காது. அது எந்த தசாவாக இருந்தாலும் இதே நிலைமை தான் அதனால் தான் சொல்லுவார்கள் சுயபுத்தி கெடுதல் தரட்டும் பிறகு நல்லது செய்யும் என்பார்கள்.

இவருக்கு மனதளவில் நிம்மதி போய்விட்டது ஆனால் இவருக்கு ஒரு விசயத்தில் மட்டும் நன்றாக இருக்கிறது அது என்ன என்றால் பணம். பணம் மட்டும் வந்துக்கொண்டே இருக்கிறது. என்ன செய்வது பணத்தை வைத்து தூக்கத்தை வாங்கமுடியாது. பணம் இருக்கிறது நிம்மதி என்றால் என்ன என்கிறான் பையன்.

பொதுவாக ஐந்தாவது வீட்டு தசா நடந்தால் பணமழை பெய்யும். பைத்தியநிலை ஆரம்பம் ஆகும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



2 comments:

KJ said...

Detailed analysis. Sukran is yoga karaga for magara lagna. Then how still native faced lot of problems. Pl explain sir.

rajeshsubbu said...

வருக KJ . நாம் அப்படி தான் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் இப்படி தான் நடந்தது. நேரிடையான அனுபவத்தில் இருந்து தந்தேன் நண்பரே.