Followers

Thursday, March 28, 2013

துலாம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     துலாம் ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரர்கள் மற்றும் வேலையாட்கள்.

அடையாளம்?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார்.இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி பூரட்டாதி 1 2 3 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு இறந்திருக்ககூடும்.

கும்ப ராசி பூரட்டாதி 1,2 ,3 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுபட்டு கொன்றுக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் மேற்கு திசையில் இருக்கும். 

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருக்கும். 

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

பரிகாரம்

சனிக்கிழமை சிவன் கோவில் சென்று நவகிரகங்களை வணங்கி வாருங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: