Followers

Saturday, March 16, 2013

சஷ்டி விரதம்



வணக்கம் நண்பர்களே!
                     எனது நண்பர் போன் செய்து சஷ்டி விரதம் இருப்பது பற்றி ஒரு பதிவை தாருங்கள் என்று சற்று முன்பு போன் செய்தார் அவரின் விருப்பத்தின் மூலம் முருகன் ஏதோ ஒன்றை செய்ய சொல்லுகிறார் என்பதை உணர்ந்து உங்களுக்கு தருகிறேன்.

முருகனுக்கு உள்ள விரதங்களில் மிகமுக்கிய விரதமாக கருதப்படுவது சஷ்டி விரதம். காலையில் எழுந்து குளித்துவிட்டு விரத்தை தொடக்க வேண்டும். வீட்டையும் சுத்தம் செய்யவேண்டும்.பிறகு கந்தசஷ்டி கவசத்தை ஒருமுறை பாராயணம் செய்யவேண்டும். காலையில் உணவு அருந்தகூடாது. மதிய நேரத்தில் விரதம் செய்யவேண்டும். சிலபேர் விரத்தை முடித்துக்கொண்டு முருகன் கோவில் சென்று வருவார்கள். சிலபேர் கோவிலுக்கு சென்று வந்தபிறகு விரத்தை முடிப்பார்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும். விரதத்தை முடித்துக்கொள்ளலாம். ஒரு முறை கண்டிப்பாக முருகன் கோவில் சென்று வரவேண்டும்.

கோவில் சென்று உங்களின் வசதிக்கேற்ப அங்கு பூஜை செய்துக்கொள்ளுங்கள். உங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் முருகனை சென்று வணங்கிவாருங்கள் போதுமான ஒன்று.  

விரத பூஜை செய்யும்போது கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து முருகனை ஆவாகனம் செய்யவேண்டும். பிறகு பூவை அதில் வைத்து ஆராதனை செய்ய வேண்டும்.

சஷ்டி விரதம் இருக்கும்போது பகலில் தூங்ககூடாது.

பெரியவர்களாக இருந்தால் காலை மாலை பழம் மட்டும் சாப்பிடலாம்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கந்தசஷ்டி தொடர்ந்து படித்து வாருங்கள்.

தினை மாவும் தேன்னும் கலந்து முருகனுக்கு படைத்தால் கூடிதல் சிறப்பு.

சஷ்டி விரதம் குழந்தை வேண்டுபவர்கள் இருப்பார்கள். நீங்கள் விரதம் இருந்து எது வேண்டுமானாலும் கேட்கலாம். முருகன் உங்களுக்கு அதனை செய்துதருவான்.

நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: