Followers

Saturday, March 9, 2013

மகாசிவராத்திரி




வணக்கம் நண்பர்களே !
                     இந்த மாதம் அதிகமாக பதிவு போடமுடியவில்லை இடையில் பல வேலைகள் மற்றும் சிவராத்திரி வருவதால் பதிவில் சிறு தொய்வு ஏற்பட்டது. 

மகாசிவராத்திரியை நான் சிறுவயதில் இருந்தே அதிகமான ஈடுபாடு காட்டிவருவேன் ஏன் என்றால் மகாசிவராத்திரி சிவனுக்கும் முக்கியமான நாள் மற்றும் எனது குலதெய்வம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கும் முக்கியமான நாள் என்பதால் ஈடுபாடு அதிகமாக இருக்கும் எனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொண்டாட்டமான நாளாக தான் இருக்கும். இந்த ஒரு வாரகாலம் அந்த வேலையில் இருந்ததால் உங்களுக்கு அதிக பதிவு தரமுடியவில்லை.

மகாசிவராத்திரி நாளை கொண்டாடபடுவதால் நீங்களும் அருகில் உள்ள சிவ ஆலயங்களில் அங்கு நடக்கும் பூஜையில் கலந்துக்கொள்ளுங்கள். உங்களால் முடிந்த உதவியை பூஜைக்கு செய்யுங்கள். 

ஒரு ஊரில் ஒரு பக்தன் இருந்தானாம் அவன் அங்கு உள்ள சிவன் கோவிலுக்கு தினமும் பூஜைக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்து வந்தான். அவனுக்கு திடிர் கஷ்டம் ஏற்பட்டது அவனால் கோவில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கமுடியவில்லை அதனல் அவன் கோவிலுக்கு செல்லவில்லை. 

சிவன் அவன் கனவில் தோன்றி ஏன் என் சந்நிதிக்கு வரவில்லை என்று கேட்டார் அதற்கு அவன் என்னிடம் எதுவும் இல்லை உனக்கு பூஜைக்கு பொருட்கள் வாங்ககூட பணம் இல்லை அதனால் என்னால் வரமுடியவில்லை என்றார்.

அதற்கு பகவான் உன்னிடம் ஏதும் இல்லை என்கிறாய் என்னை வந்து பார்த்து உன் கண்ணீரை எனக்கு காணிக்கையாக கொடுத்தால் போதுமே அதுவே உன்னை உயர்த்தும் என்றார். அப்பொழுது தான் அந்த பக்தனுக்கு புரிந்தது உடனே மறுநாள் கோவிலுக்கு சென்று தன்னால் உருகி கண்ணீரை காணிக்கையாக கொடுத்தார். இறைவன் அவனை உயர்த்தினார். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களால் எதுவும் இறைவனுக்கு கொடுக்கமுடியதா சூழ்நிலை ஏற்பட்டாலும் உங்களின் கண்ணீரை காணிக்கையாக தரும்போது இறைவன் மனம் குளிர்ந்து உங்களை வாழவைப்பான். 

உங்களிடம் பணம் இருக்கும்போது நிறைய செய்யலாம். உங்களிடம் பணம் இல்லாதபோது உங்களின் கண்ணீரை கொடுக்கலாம். முடிந்தளவுக்கு ஏழை மக்களுக்கு செய்யுங்கள் அந்த செயல் உங்களை காப்பாற்றும். கோவிலுக்கு சென்றால் எதனையாவது நாம் கொடுக்கவேண்டும் என்று நினைக்காமல் இருப்பதை கொடுக்கலாம்.

நாளை சிவனை நினைத்து மனமுருகி எனது கர்மாவின் வினையை தீர்க்க வேண்டும் என்று வேண்டுதலை வையுங்கள். இதுவே உங்களை எல்லா வகையிலும் உயர்த்தும்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: