Followers

Thursday, April 18, 2013

சிவமே: பகுதி 7



வணக்கம் நண்பர்களே!
                     கடந்த சிவமே பதிவில் தாந்திரா முறையைப் பற்றி சொல்லிருந்தேன்.  சாமியார்கள் இல்லறவாசிகளை பார்த்து நீங்கள் எந்தமுறையை பின்பற்றினாலும் அது கர்மாவின் வினையில் சிக்கிக்கொள்வீர்கள் என்று சொல்லுகிறார்கள். காமத்தால் எப்படி காமத்தை வெல்லமுடியும் என்று கேட்கிறார்கள். முள்ளை முள்ளால் எடுப்பது சாத்தியம் இல்லை என்று கேட்கிறார்கள்.

அவர்கள் சொல்லுவதும் ஒரு வகையில் சிந்தித்து பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது. ஒரு வாரிசை பெற்றுவிட்டாலே அது கர்மாவின் வினையில் தான் கொண்டுவிடும். நீங்கள் செய்யும் செயலில் இருந்தே கடவுளை அடையமுடியும் என்று மதத்தில் சொல்லிவைத்துள்ளார்கள். அதனால் காமம் என்ற செயலில் இருந்து கடவுளை அடையமுடியும் என்று சொல்லியுள்ளார்கள். 

தாந்திரா யோகம் மீது பல விவாதங்களை வைக்கிறார்கள். ஒருவன் எந்தநிலையில் இருந்தாலும் அவனை தன் சுய அனுபவத்தின் வழியாக உயர்நிலைக்கு செல்லவைக்க முடியும் என்பதை காட்டுவதே நமது மதத்தில் உள்ள தனிசிறப்பு. ஒருவனாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை தாந்திராவிற்க்கு இரண்டு பேர் தேவை. 

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவியின் உறவு என்பது எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. இவர்களின் ஒற்றுமையை தாண்டி இருவரின் ஆத்மாவும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே தாந்திரா சாத்தியப்படும். கணவன் ஒரு மாதிரி என்றால் மனைவி ஒரு மாதிரியான பழக்கவழக்கத்தை கொண்டுள்ளார்கள்.

இல்லறவாழ்க்கையை தீர்மானிப்பது பணம் என்றாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் இருவரின் ஆத்மாவும் ஒரே ஆத்மாவாக எப்படி மாறி கடவுளை அடையமுடியும் என்பது மில்லியன் கேள்வியாகவே இருக்கிறது. இதனை நான் கேட்கவில்லை பல பிரம்மசாரிகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் என்னால் சொல்லமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது.

ஏன் என்னால் சொல்லமுடியவில்லை என்றால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது எதுவாக இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இதனைப்பற்றி நான் சொல்லவில்லை. இல்லறவாழ்க்கையில் இருவரும் ஈடுபட்டு குழந்தையை பெற்றால் கூட இருவரும் ஆத்மா ரீதியாக தனித்தனியாக தான் இருக்கிறார்கள். இந்த காலத்தில் மனது ரீதியாககூட ஒற்றுமை இல்லை. பின்பு எப்படி இல்லறவாழ்க்கையில் இருந்துக்கொண்டு இறைவனை அடையமுடியும். இதனை நான் கேட்கவில்லை பிரம்மசாரிகள் இல்லறவாழ்க்கையில் இருப்பவர்களை பார்த்து கேட்கும் கேள்வி.

ஒருவர் நினைத்தால் அவர்கள் தேடும் நிலையை அடைந்துவிடமுடியும். இருவரையும் இழுத்துக்கொண்டு செல்வது முடியாத காரியமாகதான் இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: