Followers

Sunday, April 28, 2013

தோள் கொடுக்கும் தோழி



வணக்கம் நண்பர்களே!
                    இராமாயணம் மகாபாரதம் போன்றவை நமக்கு வாழ்க்கை நெறியை கற்றுக்கொடுப்பவை. இது நடந்ததோ இல்லை நடக்கவில்லையோ ஆனால் இதில் உள்ள விசயங்கள் தான் இதுவரை நடந்தவை நடந்துக்கொண்டுருப்பது நடக்கபோவதும். இராமாயணத்தில் உள்ள ஒரு கருத்தை எடுத்து உங்களுக்கு சொல்லவேண்டிய நேரம் எனக்கு சில நாட்களாக அமைந்தது.

இராமர் பிரச்சினையில் காட்டுக்குச்செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது சீதை என்ன செய்திருக்கலாம். நீங்கள் மட்டும் காட்டுச்சென்று வனவாசத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான் அரண்மனையிலேயே தங்கியிருக்கிறேன் என்று சொல்லிருக்கலாம். இந்த பெண் மட்டும் அரண்மனையில் தங்கியிருந்தாள் இராமாயணமே கிடையாது. 

சீதை சொல்லுகிறாள் நான் இராமனுக்கு மனைவியாகிவிட்டேன். மனைவின் கடமை கணவனின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்க வேண்டும் அதனால் நானும் என் கணவன் கூட காட்டிற்க்கே செல்கிறேன் என்று சொல்லுகிறாள். உண்மையில் ஊருக்கு ஊருக்கு ராமனுக்கு கோவில் கட்டி இருக்கிறார்கள் சீதைக்கு தான் கோவில் கட்டியிருக்கவேண்டும். கட்டியிருக்கிற ராமர்கோவில் எல்லாம் இராமர்கோவில் என்று சொல்லாமல் சீதை கோவில் என்று தான் சொல்லவேண்டும். எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தால் மனைவின் கடமை என்று சொல்லுகிறாள். 

இப்ப நம்ம கருத்துக்கு வருவோம். என்னிடம் சோதிடம் பார்க்கும் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு என் மனைவி என்னை விட்டு விட்டு அவளின் அம்மா வீட்டிற்க்கு சென்றுவிட்டால் என்று சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டேன். மூன்று மாதங்கள் சம்பளம் கம்பெனியில் தரவில்லை அதனால் கோபபட்டு சென்றுவிட்டால் என்று சொன்னார்கள். 

மூன்று மாதங்கள் கம்பெனியில் சம்பளம் தரவில்லை என்பதால் இவர் வீட்டிற்க்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பிரைவேட் கம்பெனியில் இது வாடிக்கையாக நடைபெறுகிற ஒரு நிகழ்வு தான் பிறகு சேர்த்து கொடுத்துவிடுவார்கள். இதற்காக உங்கள் மனைவி கோபபட்டுக்கொண்டு அவளின் அம்மா வீட்டிற்க்கு சென்றாள். உண்மையில் உங்களின் மனைவியை திருமணத்தின் போது பலான தெருவி்ல் பிடித்தீர்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது. 

சுக துக்கம் இரண்டிலும் கணவனுடன் கூடவே இருக்கவேண்டும் இதுவே மனைவின் இலக்கணம்.ஒருவனுக்கு நல்ல காலமும் வரும், கெட்ட காலமும் வரும். ஒரு மனைவி நல்ல சம்பாதிக்கும்போது அவனுடன் இருந்தது போல ஒரு மனைவி கணவனுடன் கெட்ட காலங்களிலும் கூடவே இருக்கவேண்டும்.

ஒரு நாட்டின் தலைவனாக வரபோகிறவனின் மனைவி கணவனுடன் காட்டுச்செல்லுகிறேன் என்று சொல்லுகிறாள். ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கும் நபரின் மகள் மூன்று மாதங்கள் கணவன் சம்பளம் தரவில்லை என்பதால் கணவனை விட்டுவிட்டு செல்லுவது தவறான ஒன்றாகதான் இருக்கும். 

கணவன் தரப்பிலும் தவறு இருக்கதான் செய்கிறது. இவர்கள் திருமணம் முடித்தவுடன் நான் அப்படி சம்பாதிக்கிறேன் இப்படி சம்பாதிக்கிறேன் என்று சொல்லுவது மிகப்பெரிய தவறு. பணம் இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக்கொள்ளுங்கள். வறுமையில் மனைவியை சோதனை செய்யலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள. 

மனைவி என்பவள் கணவனின் கெட்ட காலங்களில் அவனைத் தனியே தவிக்கவிடாது, தோள் கொடுக்கும் தோழியாக ஒரு மனைவி வாழவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: