Followers

Tuesday, April 9, 2013

மேஷம்: ஐந்தில் கேது



வணக்கம் நண்பர்களே !
                     மேஷ ராசிக்கு ஐந்தில் கேது பகவான் நின்றால் முன் ஜென்மத்தில் என்ன மாதிரி பாவங்களை இவர் செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். கேது பகவான் அமரும் வீட்டின் பலனை தருவார்.

மேஷ ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன்.

சூரியனின் வீட்டில் அமருவதால் சூரியனின் தன்மை அதிகமாக இருக்கும். சூரியன் ஐந்தாவது வீட்டில் அமரும்போது கெடுதலை தரும்.சிவன் கோவிலில் உள்ள விநாயகர் சந்நதியில் உள்ளவர்களுக்கு கெடுதலை தந்திருக்கலாம். விநாயகர் கோவிலில் அமர்ந்திருக்கும் சந்நியாசிக்கும் பிரச்சினை கொடுத்திருக்கலாம்.

நீங்கள் எந்த இடத்தில் அவரை தாக்கியிருப்பீர்கள் ?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால் 

கை அல்லது தோள் போன்ற இடத்தில் தாக்கி இருக்கலாம். 

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

மர்மஸ்தானத்தில் பிரச்சினையை கொடுத்திருக்கலாம். கையிலும் தாக்கியிருக்கலாம்

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

கை மற்றும் தலையில் தாக்கப்பட்டுருக்கலாம்.

ஏன் தாக்கப்பட்ட இடத்தை சொல்லுகிறேன் என்றால் இந்த ஜென்மத்தில் அந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது நாள் வரை ஏற்பட்டு இருக்கும் அல்லது இனிமேல் ஏற்படலாம். அந்த காரணத்தால் இதனை சொல்லுகிறேன். இந்த இடத்தில் பிரச்சினை ஏற்படுகிறது என்று வைத்தால் உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து வடமேற்க்கில் இருப்பார். 

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தென்கிழக்கு திசையில் இப்பொழுது வசிப்பார்.

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து கிழக்கு திசையில் இப்பொழுது வசித்து வருவார்.  

பரிகாரம்

விநாயகரை ஞாயிறு அன்று வழிபட்டு வாருங்கள். கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள். உங்களின் முன்ஜென்மத்தில் உள்ளவர் உங்களை சந்திப்பார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: