Followers

Monday, May 13, 2013

சிவமே: பகுதி 8



வணக்கம் நண்பர்களே!
                     இன்றைய காலகட்டத்தில் இல்லறவாழ்க்கையில் இருந்துக்கொண்டு மோட்சநிலைக்கு செல்வது கடினமான ஒன்று. இல்லறவாழ்க்கையில் இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக கர்மாவின் கணக்கு கூடிவிடுமே தவிர குறைவதற்க்கு வாய்ப்பு இல்லை. அதனால் தான் சாமியார்கள் எப்படி இல்லறவாழ்க்கையில் இருந்துக்கொண்டு நீங்கள் சிவனை அடையமுடியும் என்று கேட்கிறார்கள். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் மோட்சத்திற்க்கு ஆசைபடகிறார்களா என்பது கேள்வி்க்குறியான ஒன்று. இறைவன் உங்களை இந்தியாவில் பிறக்கவைத்ததின் நோக்கம் நீங்கள் மோட்சநிலைக்கு செல்லவேண்டும் என்ற கருத்ததால் அவ்வாறு செய்கிறான். இந்தியாவில் அதற்க்கான சூழ்நிலையை அதிகமாக வைத்திருக்கிறான். பாரத தேசத்தின் பல விசயங்கள் உள்ளதை புராணங்களிலும் இதிகாசத்திலும் உபநிடத்திலும் பலவேறு இடத்தி்ல் சுட்டிக்காட்டியுள்ளார்கள். நாம் இந்தியாவில் பிறந்தும் நாம் அதனைப்பற்றி கவலைக்கொள்வதில்லை. இப்பொழுது கலியுகத்தில் பக்தி மட்டுமே உள்ளது. மோட்சம் போய்விட்டது. மோட்சத்திற்க்காக தான் இந்த இந்தியா உருவாக்குப்பட்டது ஆனால் அதன் திசை மாறிவிட்டது. 

சாமியார்கள் தன் குலத்தை அழித்துக்கொண்டு எனது கர்மா தொடரக்கூடாது என்ற எண்ணத்தில் தன்னை குலத்தை அழிக்கிறான். என்னால் ஒரு உயிர் உருவாககூடாது என்ற எண்ணத்தில் தன்னுடைய பிறப்புறுப்பை அழிக்கிறான். இயேசு நாதர் ஒன்றைச்சொல்லுவார் உனக்கு எது பிரச்சினை தருகிறதோ அதனை நீ வெட்டி எறிந்துவிடவேண்டும் என்று சொல்லுவார். உன்னுடைய கண் பிரச்சினை தருகிறது என்றால் அந்த கண்ணை பிடுங்கி எறியவேண்டும் என்பார். இந்தியாவில் உள்ள கிருஷ்துவர்கள் தன் பிறப்புறுப்பால் தான் பிரச்சினை வருகிறது என்று அவர்களின் பிறப்புறுப்பை பிடுங்கி போட்டுள்ளார்களா?. இயேசுநாதர் சொன்னதை ஒரு கிருஷ்துவரும் கடைபிடிப்பதில்லை.

சாமியார்கள் தன்னுடைய பிறப்புறப்பால் தான் கர்மா தொடர்கிறது என்று அதனை துண்டிக்கிறார்கள். நேராக சுடுகாட்டிற்க்கு சென்று தனிமையான வெட்டவெளியில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சுடுகாட்டில் அப்படி என்ன இருக்கிறது? சுடுகாடு என்பது வெட்டவெளி தான். தான் தியானம் செய்வதற்க்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று எண்ணி அங்கு போய் இருக்கிறார்கள். சுடுகாடு என்பது தனிமையான ஒரு இடம் தான் இன்று அங்கும் சுற்றி வீடு எல்லாம் வந்துவிட்டது அங்கும் தனிமை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

ஒரு தனி நபர் சுடுகாட்டிற்க்கு செல்வதற்க்கும் ஆன்மீகவாதி சுடுகாட்டிற்க்கு செல்வதற்க்கும் வித்தியாசம் இருக்கிறது. தனி நபர் சும்மா சென்று அங்கு படுத்து தூங்கிக்கொண்டு கூட வரலாம். ஏன் அங்கேயே தங்கி கூட இருக்கலாம் ஆனால் ஒரு ஆன்மீகவாதி சென்றால் அங்கு அவனுக்கு ஏற்படும் நிலை வேறு. இதனைப்பற்றி அதிகமாக எழுதி உங்களை பயமுறுத்தவில்லை. சுடுகாடு என்பது தனிமையாக வெட்டவெளி. வெட்டவெளியாக சிவத்தை தரிசனம் செய்து அவனுள் அடங்கவேண்டும் என்று எண்ணி சாமியார்கள் அங்கு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மரணத்தில் இருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறது என்று சொல்லுகிறார்கள். இருப்பது மரணம் ம்ட்டுமே பிறப்பு அல்ல என்று சொல்லுகிறார்கள். இல்லறவாசிகள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ளது வாழ்க்கை என்கிறார்கள்.

சாமியார்கள் சொல்லுகிறார்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இருப்பது கர்மா தானே தவிர அது வாழ்க்கை இல்லை. எந்த வாழ்க்கை ஆனந்தத்தை தருகிறதோ அதுவே வாழ்க்கையாகும். உங்களுக்கு ஒரு ஆனந்தமும் கிடைக்காது என்கிறார்கள். எந்த வாழ்க்கை இறப்பில் முடிவடைகிறதோ அது வாழ்க்கை இல்லை என்கிறார்கள்.

சிவமே தொடரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: