Followers

Tuesday, June 4, 2013

குடித்தனம் போககூடாத மாதங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு சராசரியான மனிதனுக்கும் ஒரு ஆசை இருக்கும் அது என்ன என்றால் ஒரு புதிய வீடு கட்டவேண்டும் என்ற ஆசை. கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டியபிறகு ஒரு நாள் நாளாக பார்த்து அந்த வீட்டிற்க்கு குடிபோகும்போது அந்த மனிதனின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள்

ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி

ஏன் போககூடாது என்ற காரணத்தைப் பார்க்கலாம்

இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது. பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது. இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது. பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம். மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது. மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது. 

இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

4 comments:

Anonymous said...

தகவலும் காரணங்களும் சிறப்பு.

rajeshsubbu said...

//* ஸ்ரவாணி said...
தகவலும் காரணங்களும் சிறப்பு *//

நன்றி

Unknown said...

in case if it was done is there any remedy. coz I moved in "Purattasi"
-Surya

rajeshsubbu said...

போககூடாது என்று சொல்லுகிறார்கள் போய்விட்ட பிறகு ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று இருக்கவேண்டியது.