Followers

Saturday, June 1, 2013

உடற்கட்டு


வணக்கம் நண்பர்களே !
                    ஆன்மீகவாதிகள் பல பேர் உடற்கட்டு என்று சொல்லுவதை நீங்கள் கேட்டுருக்கலாம். இந்த உடற்கட்டைப்பற்றி சித்தர்கள் தான் அதிகமாக சொல்லிருப்பார்கள் அது ஏன் என்றால் சித்தர்கள் அனைவரும் காடுகளில் வசித்தவர்கள். காடுகளில் வனவிலங்குகளின் தொந்தரவு இருக்ககூடாது என்பதால் இந்த மாதிரி தன்னை சுற்றி ஒரு கவசத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்.

காடுகளில் வனவிலங்களுக்கும் மட்டும் இல்லை துர்தேவதைகளின் தொந்தரவும் இருக்ககூடாது என்ற காரணத்தால் உடற்கட்டை ஏற்படுத்தியிருப்பார்கள். இதனை இப்பொழுது அதிகமாக பயன்படுத்துபவர்கள் மாந்தீரீகர்கள். பிறர் தாக்குதலில் இருந்து தப்பிக்க இதனை போட்டுக்கொள்வார்கள்.

உடற்கட்டு என்பது தன்னை சுற்றி ஒரு கவசம் போல் பாதுகாத்துக்கொள்ளும் தன்மை உடையது. இந்த உடற்கட்டு என்பது ஒரு குறிப்பிட்ட நாட்களை வரை தான் இருக்கும் அதன் பிறகு நீங்கள் புதிய உடற்கட்டு போட்டுக்கொள்ளவேண்டும். உடற்கட்டு போடுவதில் ஒவ்வொருவரும் ஒரு வழியை பின்பற்றுவார்கள். ஒரு சிலர் மந்திரங்களை வைத்து உடற்கட்டு போடுவார்கள்.

காடுகளுக்கு போகும் சாமியார்கள் போடும் உடற்கட்டு மிகச்சக்தி வாய்ந்ததாக இருக்கும். இவர்கள் மந்திரங்களை வைத்து உடற்கட்டு போடமாட்டார்கள். அது ஒரு முறை இருக்கிறது மந்திரங்கள் இல்லாமல் போடுவார்கள். இதனை அவ்வளவு எளிதில் வெளியில் சொல்லமாட்டார்கள். குரு தன்னுடைய சிஷ்யனுக்கு போட்டுவிடுவார். 

நாம் சொல்லும் சோதிடத்திற்க்கு கூட உடற்கட்டு இருந்து சோதிடத்தை சொன்னால் எந்தவித பாதிப்பும் நம்மை நெருங்காது. உடற்கட்டு இல்லாமல் சோதிடம் சொல்லும்பொழுதும் மட்டுமே பாதிப்பு வரும்.

மாந்தீரீகர்கள் அடுத்தவர்களின் உடற்கட்டை அவிழ்த்து தான் தாக்குதலை செய்வார்கள். மாந்தீரீகர்களின் தாக்குதலை சமாளிக்கும் உடற்கட்டு நம்மீது போடபட்டால் மட்டுமே நாம் தப்பிக்கலாம்.

உடற்கட்டு இருக்கும் ஒரு நபரை அவ்வளவு எளிதில் தாக்கமுடியாது. இப்பொழுது சமூகத்தில் பிரபலமானவர்கள் அரசியல் தலைவர்கள் சினிமா நடிகர்கள் எல்லாம் உடற்கட்டை போட்டுக்கொள்கிறார்கள். வெளியில் யாரும் சொல்லுவதில்லை. கடவுள் இல்லை என்று வெளியில் பேட்டிக்கொடுப்பார்கள். உள்ளுக்குள் அனைத்தும் நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

4 comments:

Anonymous said...

பிறர் நமக்கு கட்டு இட்டு விட்டால் ?
அதை எப்படி அவிழ்ப்பது ?

rajeshsubbu said...

வணக்கம் ஸ்ரவாணி பிறர் நமக்கு கட்டு போடமாட்டார்கள். உங்களுக்கு கட்டுப்போட்டால் ஏன் அதனை அவிழ்க்க நினைக்கிறீர்கள் நல்லது தானே. கட்டு உங்களை காக்கும் அல்லவா

Anonymous said...

நான் குறிப்பிடுவது ஏவல் கட்டு , வசியக் கட்டு போன்றவைகளை.

rajeshsubbu said...

அதனை மாந்தீரிகவாதிகளை கொண்டு தான் அவிழ்கவேண்டும்