Followers

Wednesday, July 24, 2013

தசாநாதன் பகுதி 8


வணக்கம் நண்பர்களே!
                     தசாநாதனின் பலனை சொல்லும்பொழுது லக்னதசா நடைபெற்றால் யார்க்கு எல்லாம் பலன் தரும் என்பதைப்பற்றி நாம் பார்க்கலாம்.

ஒருவருக்கு லக்னதசா நடைபெற்றால் உடனே உங்களுக்கு லக்னதசா நடைபெறுகிறது அதனால் உங்களுக்கு யோககாலம் என்று நாம் சொல்லகூடாது. அந்த லக்னத்தைப்பற்றி நாம் தெரிந்துக்கொண்டு பலன் சொல்லவேண்டும்.

பொதுவாக லக்னதசாவைப்பற்றி பார்க்கும்பொழுது அந்த லக்கினத்தின் கிரகம் எங்கு அமர்ந்துள்ளது என்பதைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். லக்கினத்தை பார்க்கும் கிரகத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எல்லாம் அஷ்டவர்க்கம் பெரிதாக தெரிகிறது அல்லவா அதனையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை எல்லாம் தெரிந்த பிறகு அவர்களுக்கு நாம் பலனை சொல்லுவோம் இது ஒரு வகையான பலனை சொல்லும் ஒரு உத்தி.

வேறு வழியை ஒன்றை பார்க்கலாம்

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் சரராசியாக இருந்து அந்த தசா நடைபெற்றால் அந்த ஜாதகருக்கும் முழு பலனையும் லக்கினதசா தரும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் ஸ்திரராசியாக இருந்து அந்த தசா நடைபெற்றால் அந்த ஜாதகருக்கு லக்கின தசா பாதியளவு மட்டுமே அவர்களுக்கு பலனை தரும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் உபராசியாக இருந்து தசா நடைபெற்றால் அவருக்கு லக்கினதசா சுமாரான பலனை தரும்.

சரராசி :மேஷம் ,கடகம், துலாம், மகரம்
ஸ்திர ராசி :ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்
உபய ராசி :மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: