Followers

Saturday, July 20, 2013

குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                    குலதெய்வ வழிபாடு ஒருவருக்கு மட்டும் ஒழுங்காக செய்துக்கொண்டு இருந்தார்கள் என்றால் அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.

என்னை சந்திக்கும் நண்பர்கள் அனைவரும் கேட்பது எங்களின் குலதெய்வத்திற்க்கு அசைவம் வைத்து தான் படைப்போம் அதனை நாங்கள் செய்யலாமா என்று கேட்கிறார்கள். தாராளமாக நீங்கள் செய்யலாம். உங்களின் தெய்வம் அசைவம் வைத்து படைக்கும் தெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள்.நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்றவேண்டாம்.

உங்களின் அப்பா உங்களின் தாத்தா அதற்கு முன் உள்ளவர்கள் என்ன செய்தார்களோ அதனை செய்யுங்கள். ஒன்றும் தவறு இல்லை. ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒவ்வொரு படையல் முறை செய்வார்கள். உங்களுக்கு அதனை பற்றி தெரிந்தால் அதனை செய்யுங்கள் அப்படி இல்லை என்றால் நமது பிளாக்கில் உள்ள வழிமுறையை பின்பற்றலாம்.

மாதம் மாதம் பூஜை செய்வதற்க்கு பச்சை பரப்புதல் என்று நமது அம்மனின் பூஜையில் சொல்லி இருந்தேன் அதனை நீங்கள் செய்யலாம். பச்சை பரப்புதல் என்பது அனைத்து தெய்வத்திற்க்கும் பொதுவான ஒன்று. பச்சை பரப்புதல் மிக விஷேசமான ஒன்று. அனைத்து தெய்வத்திற்க்கும் ஏற்ற ஒன்று.

பூஜை செய்யும்பொழுது மந்திரங்களை சொல்லவேண்டும் என்பது கிடையாது. மனதால் நினைத்தால் போதும். செய்கின்ற முறை மட்டுமே ஒழுங்காக இருக்கவேண்டும்.அதாவது சரியான முறையில் இருக்கவேண்டும்.

பச்சை பரப்புதல்

பூஜையறையில் விளக்கு முன்பு வாழை இலையை போடவேண்டும். பச்சை அரிசியை தண்ணீரில் நன்றாக நனைத்துவிட்டு பிறகு இலையில் பச்சைஅரிசியை போடவேண்டும். பச்சை அரிசி மேல் வெல்லத்தை துண்டாக வெட்டி அதில் போடவேண்டும். இதன் மேல் மாவிளக்கை வைக்க வேண்டும். மாவிளக்கு மாவை நன்றாக பிசைந்து ஐந்து உருண்டையாக பிடித்து அதன் மேல் விளக்கை போடவேண்டும். பழவகைகளும் இலையின் ஒரத்தில் வைக்கலாம். பிறகு தீபராதனை செய்ய வேண்டும்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

g.sumathi55@gmail.com said...

குலதெய்வம் கிடையாது என்கிறார்கள் எங்கள் வீட்டில். ஆனால் குலதெய்வம் இல்லாதவர்கள் யாருமே இல்லை என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆகவே, குலதெய்வம் எது என்றே தெரியாத பொது என்ன செய்வது என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்.

rajeshsubbu said...

வணக்கம் பதிவில் தருகிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். தங்களின் வருகைக்கு நன்றி.