Followers

Wednesday, July 3, 2013

நன்றியை செலுத்தும் விதம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு அனுபவம் நடந்ததை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். எனக்கு ஒரு சாமியார் ரொம்ப நாளாக பழக்கம் இருந்தது. அவரை பார்க்கும்பொழுது அவருக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன். 

எனக்கு சாமியார்களுக்கு பண உதவி செய்ய பிடிக்கும். நான் வெளியில் செல்லும்பொழுதும் எந்த சாமியாரை பார்த்தாலும் கையில் இருக்கும் பணத்தில் ஒரு சிறு உதவி செய்வேன். ஒரு சில சாமியார்கள் என்னோடு நல்ல பழகிவிடுவார்கள் அவர்கள் என்னை தேடியும் வருவார்கள். என்னை தேடி வரும்பொழுது அவர்களுக்கு பணம் கொடுப்பேன். அனைத்து பணமும் நீங்கள் கொடுத்தது தான் நண்பர்களே. நீங்கள் கட்டண சோதிடம் வழியாக செலுத்திய பணம் மற்றும் ஒரு சிலர் எனது வங்கி கணக்கில் பணத்தை சும்மாவாகவே செலுத்திவிடுகிறார்கள். இந்த பணத்தை எடுத்து தான் இப்படி சேவை செய்வேன். 

நான் சோதிட தொழில் செய்தாலும் நமக்கு தினமும் வேலை செய்து அதன் மூலம் வரும் பணத்தை எனக்கு செலவழித்துக்கொள்ள வேண்டும். நான் அமர்ந்து இருக்கும் அலுவலகத்தில் வழியாக எனக்கு பணம் வருகிறது. அதனை என்னுடைய செலவுக்கு வைத்துக்கொள்வேன். 

இந்த சாமியாருக்கு நான் இதுவரை அதிகபட்சமாக இரண்டாயிரம் பணம் கொடுத்து இருக்கலாம் அவ்வளவு தான் இந்த சாமியாருக்கு நான் கொடுத்தது. இவர் என்னை அடிக்கடி வந்து சந்திப்பதால் இவ்வளவு பணம் கொடுத்திருக்கலாம். சாமியார்களுக்கு செய்வதை நாம் கணக்கில் வைத்துக்கொள்ளகூடாது.

ஒரு வருடகாலமாக இவர் எனக்கு பழக்கம். இவர் ஒரு வாரத்திற்க்கு முன்பு என்னை வந்து சந்தித்தார். சும்மா பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஒரு பையில் இருந்து கட்டு கட்டாக பணத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் சாமி எதற்கு பணம் எப்படி இவ்வளவு பணம் என்று கேட்டேன். 

நானும் வரும்பொழுது எல்லாம் நீ எனக்கு பணஉதவி செய்தாய் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு செய்தாய் அதற்கு நன்றிக்காக இதனை வைத்துக்கொள் என்றார். இந்த காலத்தில் நன்றி என்பது எல்லாம் அனைத்தும் இருக்கிற சாதாரண மனிதர்களுக்கு இல்லாத காலத்தில் இவரின் செயலை என்ன என்று சொல்வது. நான் எனக்கு பணம் வேண்டாம் சாமி நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். அவர் எவ்வளவோ  கேட்டும் நான் பணத்தை பெறவில்லை. 

சில லட்சங்களை அவர் கொடுத்தார். ஒரு பைசா கூட நான் வாங்கவில்லை. நீங்கள் எப்படி இந்த பணத்தை சம்பாதித்தீர்கள் என்று கேட்டேன். ஒரு நபர் அவருடைய நிலத்தை நீண்ட நாட்களாக விற்க முடியவில்லை என்று சொன்னார். ஒருவர் மூலம் எனக்கு அந்த நபர் பழக்கம் அந்த நிலத்தை விற்க என்னால் முடிந்த உதவியை செய்தேன். அந்த நிலம் விற்றவுடன் எனக்கு பணம் தந்தார் என்று சொன்னார.  

நான் அவரிடம் இந்த பணத்தை நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்துவையுங்கள். உங்களுக்கு தேவைப்படும்பொழுது எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். நீயே வைத்துக்கொள் என்றார் எனக்கு அது எல்லாம் வேண்டாம். உங்களுக்கு ஒரு வங்கியில் கணக்கை தொடங்கி தருகிறேன் அந்த கணக்கில் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

ஒரு சாதாரண சாமியார்க்கு நாம் செய்கின்ற சிறிய உதவி நமக்கு புண்ணியததை மட்டும் தராது பல விசயங்களை தேடி தரும் என்பதை இந்த நிகழ்வு மூலமாக தெரிந்துக்கொண்டேன். வேறு யாரும் கொடுத்திருந்தால் நான் பணத்தை வாங்கியிருப்பேன் ஆனால் ஒரு சாமியாரிடம் நாம எதனையும் பெறக்கூடாது. அவர்களின் அருளை மட்டும் நாம் பெறவேண்டுமே தவிர பொருளை கிடையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

கார்த்திக் சரவணன் said...

சாமியார்களுக்கு நாம் தான் உதவி செய்யவேண்டும் என்றும் அவர்களிடமிருந்து எந்தப் பொருளும் வாங்கக்கூடாது என்றும் அருமையாகச் சொன்னீர்கள்.... நன்றி...

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் வருகைக்கு நன்றி