Followers

Tuesday, July 9, 2013

சனிக்கு பரிகாரம்: விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                     சனிக்கு பரிகாரம் பதிவை பார்த்து நிறைய பேர் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. தனித்தனியாக பதிலை தருவதைவிட பதிவில் தந்துவிட்டால் அனைவருக்கும் தெரியும் என்பதால் பதிவில் தருகிறேன்.

ஒருவருக்கு ஏழரை சனியோ அஷ்டமசனியோ அல்லது வேறு கெடுதலை தரும் சனியின் பிடியில் இருக்கும்பொழுது சனியின் ஆதிக்கம் மட்டுமே அதிகமாக இருக்கும். சனி என்பது இருண்ட கிரகம் அதாவது நெகட்டிவ் பக்கம் கொண்டது. பாசிட்டிவ் சக்தி தான் கடவுள். இந்த பாசிட்டிவ் எனர்ஜி நமக்கு கிடைக்காமல் செய்வது தான் சனியின் வேலை. நாம் செய்யும் தவறான செயலுக்கு தண்டனை தருவது போல் தான் சனியின் பிடியில் இருக்கும்பொழுது செய்யும். 

செவ்வாய் கிரகமும் சனி கிரகமும் பகை கிரகங்கள் என்பதால் சனியின் பிடியில் இருக்கும்பொழுது செவ்வாயை வணங்கும்பொழுது சனிக்கு பிடிக்காது அப்படி வணங்கும்பொழுது அவர் என்ன செய்வார் என்னுடைய எதிரியின் ஆளா நீ உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கையை அல்லது காலை உடைத்துவிடுவார். அந்த காரணத்தால் தான் சனியின் பிடியில் இருக்கும்பொழுது செவ்வாயை வணங்கவேண்டாம் என்ற சொன்னேன்.

ஒரு நண்பர் ஒரு பாடலை தந்து கேள்வியை கேட்டுள்ளார். அவருக்கு நன்றி. அந்த பாடலை எழுதியவர்கள் எல்லாம் மிகப்பெரிய ஆன்மீகவாதிகள். அவர்களுக்கு எல்லாம் நடக்கும். நமது நிலைமை வேறு. நாம் இப்பொழுது கோவிலுக்கு சென்று வணங்குகிறோம். நாம் அப்படியே மனதை கடவுள் மேல் செலுத்துகிறோமா என்றால் கண்டிப்பாக கிடையாது. இதனை தான் அழகாக சொல்லுவார்கள். வெறும் விபூதி கருவரைக்குள் சென்று வரும்பொழுது திருநீராக புனிதமாக வருகிறது.  வெறும் தண்ணீர் கருவரைக்குள் சென்று வரும்பொழுது புனிததீர்த்தமாக வருகிறது. மனிதன் கோவிலுக்கு சென்றால் அவன் மனிதனாக மட்டுமே வருகிறான். இப்பொழுது எல்லாம் கோவிலுக்கு சென்றால் மனிதன் பிகரோடு வருகிறான் . நமது மனம் அந்தளவுக்கு இருக்கிறது.

அப்பொழுது உள்ள பாடல்களை பாடும் நபர்கள் அந்தளவுக்கு தன்னை உருக்கி பாடலை பாடியவர்கள். அதனை இந்தகாலத்தில் ஒப்பிடுவது கடினமான ஒன்று. அந்தளவுக்கு உங்களால் பக்தி வைக்கமுடியும் என்றால் கண்டிப்பாக உங்களை சனியின் பிடியில் இருந்து காப்பாற்றுவார்.

பாம்பன் சுவாமிகளைப்பற்றி உங்களுக்கு தெரியும். இவர் மிகப்பெரிய முருகனின் பக்தர். இவருக்கும் சனி பகவான் காலை உடைத்துவிட்டார். இவரின் பக்தியை பார்த்து முருகனே அந்த காலை சரிசெய்துக்கொடுத்தார் என்று சொல்லுவார்கள். அது ஒரு விழாவாகவே இப்பொழுதும் கொண்டாடுவார்கள். அவரின் பக்தி வேறு நமது பக்தி என்பது வேறு. பாம்பன் சுவாமிகள் வைத்த நம்பிக்கை உங்களால் வைக்கமுடியும் என்றால் தாராளமாக முருகன் உங்களை காப்பாற்றுவார்.

வாயு புத்திரன் ஆஞ்சநேயர் என்பதால் சனியும் காற்று கிரகம் என்பதால் ஆஞ்சநேயருக்கு நீங்கள் வெண்ணை சாற்றும்பொழுது அவரின் உள்ளம் குளிர்ந்து சனியின் பிடியில் இருந்து உங்களை காப்பாற்றுவார்.  ஒரு நண்பர் வெண்ணை சாற்றுவது என்ன என்று கேட்டுள்ளார். உடல் முழுவதும் சந்தனகாப்பு செய்வார்கள் அல்லவா அது போல் ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் வெண்ணையை சாற்றுவார்கள். கேட்ட நண்பர் வெளிநாடு என்பதால் அங்கு இல்லை என்று நினைக்கிறேன். இந்தியாவில் இது உண்டு. இந்தியா வரும்பொழுது நீங்கள் வெண்ணை காப்பு செயதுக்கொள்ளுங்கள்.  மேலே உள்ள படத்தை பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

8 comments:

dreamwave said...

வணக்கம் ,

வாஸ்து பற்றி எழுதுகள்!!!!

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே கண்டிப்பாக எழுதுவோம். நன்றி

Anonymous said...

thalaivar kalainjar ayyul ethanai varudam,
pirabakaran uyirudan ullara,
adutha mp therthalil tamilnatil adhika idangalil vetri perum katchi
paralamanarathil aatchiyai pidikum katchi


ivatrai kanithu sollungal,
jadhaga palan endha alavu thuliyam endru arindhu kolvom...

rajeshsubbu said...

வணக்கம் அனைத்தும் சோதிடத்தில் சொல்லமுடியும். சோதிடம் துல்லியம் என்று தன்னை நிருபத்துக்கொண்டு இருக்கிறது. கணிப்பவர்கள் தான் தவறு செய்வார்கள். இவர்களை பற்றி தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்.

Anonymous said...

therindhu kollum arvamdhan :)

ivatril kannipadharku detail ullavatrai kanithu sollungal

thanks

geemanika said...

Hi sir,

Thanks for your explanation on vennai kaappu.

Tq.

Anonymous said...

படமும் பதிவும் திவ்யம் !
.

rajeshsubbu said...

வணக்கம் ஸ்ரவாணி தங்களின் வருகைக்கு நன்றி