Followers

Saturday, August 10, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 4


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு ஐந்தாம் வீட்டில் நல்ல நிலையில் அமர்ந்து தசா நடைபெற்றால் 

லாட்டரி வழியாக பணவரவு ஏற்படும். இப்பொழுது லாட்டரி இல்லை என்றாலும் தீடிர் பணவரவு ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் பங்குக்கு கொள்ள வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். உங்களின் குழந்தை வழியில் நல்ல பெயர் கிடைக்கும்.உங்களுக்கு புதிய காதல் முளைக்கும். அரசாங்க உதவி கிடைக்கும். முன்ஜென்மத்தில் உங்களோடு இருந்த நபர்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.

ராகு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து கெடுதல் தரும் நிலையில் இருந்து தசா நடைபெற்றால் கருக்கலைப்பு நடைபெறும். புத்திரவழியில் பிரச்சினையை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும்.  மனதில் தேவையில்லாத பதட்டம் ஏற்படும். மனநிலையை அதிகமாக பாதிக்க செய்வார். அறிவு மழுங்கிவிடும். எதிலும் ஒரு தீர்வை எடுக்கமுடியாத நிலையை ஏற்படுத்துவார். 

ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ராகு தசா நடத்தும்பொழுது அதிகமான பணவரவுகளையும் தருவார். ஒருவருக்கு ஐந்தாவது வீட்டில் கெடுதல் கிரகங்களின் தசாவில் அதிகமாக சொத்துகளை சேர்த்துவிடுவார்கள்.ஐந்தில் ராகுவும் அதனை செய்யும். அதே நேரத்தில் பிரச்சினையையும் சந்திக்க நேரிடும்.

குறிப்பாக திருமணவாழ்வில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படுத்துவார். உங்களின் துணைவர் உங்களுக்கு பிரச்சினை கொடுப்பார். இருவருக்கும் புரிதல் இல்லாமல் இருக்கும் அதனாலே சண்டை போட்டுக்கொண்டு பிரிய நேரிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: