Followers

Wednesday, August 21, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 8


வணக்கம் நண்பர்களே!
                    பதினோராவது வீட்டில் ராகு நல்ல நிலையில் அமர்ந்து தசா நடைபெற்றால் தீடீர் பணவரவுகள் வரும். மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் துறையில் நல்ல வருமானம் வரும். நீங்கள் வேலை செய்துக்கொண்டிருந்தால் உங்களின் வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். உங்களோடு வேலை செய்பவர்கள் உங்களுக்கு பணஉதவி செய்யக்கூடும். அரசாங்க வழியில் மரியாதை கிடைக்கும். தனவரவு திருப்பதிகரமாக இருக்கும். துணைவர் வழியில் வருமானம் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

ராகு பதினோராவது வீட்டில் கெடுதல் தரும் நிலையில் அமர்ந்து தசா நடைபெற்றால் சுத்தமாக பணவரவு இருக்காது. வருகின்ற பணம் எப்படி வெளியில் போகின்றது என்பது கூட தெரியாது.அனைத்து பணமும் போய்விடும்.  மூத்த சகோதர சகோதரிகள் வழியில் உதவி கிடைக்காது. அவர்கள் உங்களோடு பகையாகிவிடுவார்கள்.

ராகு பனிரெண்டாவது வீட்டில் நல்ல நிலையில் அமர்ந்து தசா நடைபெற்றால் உங்களின் வீட்டில் ஒரு விழா நடைபெறும்.  துணைவரோடு அதிக இன்பத்தில் இருப்பீர்கள். நிலத்தின் வழியாக வருமானம் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்வீர்கள். சில நேரங்களில் அங்கேயே தங்கி வேலையும் செய்வீர்கள். வீட்டில் திருமண ஏற்பாடு நடைபெறும்.

ராகு பனிரெண்டாவது வீட்டில் கெடுதல் தரும் நிலையில் இருந்து தசா நடைபெற்றால் உங்களின் பணம் செலவாகும். மருத்துவமனையிலேயே இருக்கவேண்டிய நிலை ஏற்படும். பாதங்களில் பிரச்சினை உண்டாகும். உங்களின் சொத்துக்களை இழக்கவேண்டிவரும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: