Followers

Saturday, August 24, 2013

நாய் பாவம்


வணக்கம் நண்பர்களே !
                    தலைப்பை பார்த்தவுடன் என்ன புதுமையாக இருக்கிறதே என்று எண்ணவேண்டாம். மனிதன் எப்படி தான் யோசிப்பானோ என்று தெரியாது. அவன் சிந்தித்து செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் டஷன் கணக்காக கர்மத்தை எடுத்துக்கொள்கிறான். வெளியில் சொல்வது மட்டும் நான் ஒரு தவறையும் செய்யவில்லை என்பான். அவனுக்கே தெரியாமல் அடுக்கடுக்காக தவறை செய்வான்.

எனக்கு ஒன்றும் வேலையில்லை என்றால் சில நேரங்களில் பெசன்ட்நகர் பீச்சில் போய் அமர்ந்து இருப்பேன். அந்த பீச்சில் பார்த்தால் ஏகாப்பட்ட மனிதர்கள் நாய்களை பிடித்துக்கொண்டு அலைவார்கள். அவர்கள் அந்த நாயிடம் காட்டும் பாசத்தை பார்த்தால் பாசமலர் படத்தை டிஜிட்டலில் பார்த்த ஒரு உணர்வு ஏற்படும். அந்தளவுக்கு பாசத்தை காட்டுவார்கள்.

ஆண்களை பார்த்தால் தன் மனைவியை கூட அந்தளவுக்கு கொஞ்சி இருப்பார்களா என்றே தோன்றும் அப்படி ஒரு பாசம் அவர்களின் நாய் மேல் அதேபோல் பெண்களாக இருந்தால் முதலில் பாசம் நாய் அடுத்தது தான் கணவன் அப்படி ஒரு காட்சி எல்லாம் பெசன்ட்நகர் பீச்சில் பார்க்கலாம். 

சரி மேட்டருக்கு வருகிறேன்.

சில வீடுகளுக்கு செல்லும்பொழுது நாய்களை வளர்த்து வருகிறார்கள். ஏதோ ஒரு காரணத்திற்க்காக வளர்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பெண் நாய்களையும் வளர்க்கிறார்கள் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் இந்த பெண் நாய்களை ஆண் நாயோடு இணைப்பதில்லை என்பது தெரியவருகிறது. ஏன் இணைப்பதில்லை என்று கேட்டால் குட்டி போட்டு விடும். ஏகாப்பட்ட தொல்லை வந்துவிடும் என்கிறார்கள். இது கொலை செய்யும் பாவத்தோடு மிகப்பெரிய பாவம். உங்களுக்கு இது மிகப்பெரிய கர்மமாக வந்துவிடும்.ஏகாப்பட்ட சிக்கலை நீங்கள் சந்திக்க வேண்டிவரும்.

உங்களின் வீட்டில் நாய் வளர்த்தால் அதனை இணைவதற்க்கு விடுங்கள். அப்படி முடியவில்லை என்றால் நாயை வளர்க்காதீர்கள். நாய் வளர்ப்பதால் இன்னோரு சிக்கல் இருக்கிறது அது என்ன என்றால் உங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாது. முன்னோர்கள் வரமாட்டார்கள். அமாவாசை விரதம் செய்யமுடியாது. ஆளை வரமுடியாது என்னும்பொழுது விரதம் யாருக்கு செய்வது. இப்படிபட்ட பிரச்சினை இருப்பதால் நாயை வளர்க்காமல் இருப்பதே நல்லது.

நாய் வளர்க்கிற குடும்பம் எல்லாம் பல பிரச்சினையை சந்திப்பதை நான் பார்த்து இருக்கிறேன். இதனை நான் சொன்னால் இவனுக்கு வேலை இல்லை ஏதாவது சொல்லிக்கொண்டு இருப்பான் என்பார்கள். சொல்லவேண்டியதை சொல்லியாகிவிட்டது எடுத்துக்கொள்வதும் எடுத்துக்கொள்ளாததும் உங்களின் முடிவை பொருத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Anonymous said...

மிக நியாயமான காரணம் !
நாய்களுக்கு அமானுஷ்யத்தை உணரும் சக்தி இருப்பதால்
என்னவோ முன்னோர்கள் வருவதில்லை போலும்.
நல்லதொரு புதிய தகவல் பகிர்விற்கு மிக்க நன்றி !

rajeshsubbu said...

வணக்கம் ஸ்ரவாணி மேடம்
நாய்களுக்கு அமானுஷ்யத்தை உணரும் சக்தி இருக்கின்றது. தங்களின் வருகைக்கு நன்றி.