Followers

Friday, August 2, 2013

ஆடி அமாவாசை



வணக்கம் நண்பர்களே!
                     நமது கடமையை நிறைவேற்ற ஒரு நாள் வருகிறது. அந்த நாளில் நமது கடமையை நிறைவேற்றுவோமா

6-08-2013 செவ்வாய்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது. அன்றைய நாளில் நமது முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும். மிகப்பெரிய அமாவாசை என்று சொல்லப்படும் ஆடி அமாவாசை நாளில் நமது முன்னோர்களுக்கு நாம் திதி கொடுப்பதன் மூலம் நமது தடைகள் எல்லாம் விலகி நல்ல நிலையான வாழ்க்கை நமக்கு கிடைக்கும்.

முன்னோர்களின் சாபம் நமக்கு ஏற்படும்பொழுது நமக்கு காரிய தடைகள் வருகிறது. ஒரு காரியம் தடை ஏற்பட்டால் நமது மனம் துன்பப்படும். ஒரு திருமண ஏற்பாடு நடைபெற்று அது தடைப்பட்டால் நமக்கு மனஉளைச்சல் ஏற்படும் அல்லவா அதற்க்கு எல்லாம் நமது முன்னோர்களுக்கு நாம் திதியை ஒழுங்காக கொடுக்கவில்லை என்று அர்த்தம். இதனை பல பதிவுகளில் சொல்லிருந்தாலும் ஆடி அமாவாசை என்பதால் இந்த நேரத்தில் உங்களுக்கு சொல்லுகிறேன்.

ஆடி அமாவாசை அன்று நீங்கள் விரதம் இருந்து முன்னோர்களுக்கு கொடுக்கவேண்டிய தர்பணத்தை கொடுங்கள். அம்மா அப்பா இருப்பவர்கள் சிவாலயங்களில் அன்னதானம் செய்யுங்கள்.அன்னதானம் மக்களுக்கு மட்டும் என்று இல்லை அனைத்து உயிரினங்களுக்கும் அன்னதானம் செய்யலாம். நமது முன்னோர்கள் எந்த உருவிலும் வரலாம் என்பதால் பிற உயிர்களுக்கும் அன்னதானம் செய்யும்பொழுது நமதுக்கு முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.

ஆடி அமாவாசை நமது அம்மனுக்கும் உகந்த நாள் அன்றைய நாளில் நமது அம்மனை மனதில் நினைக்கும்பொழுது நமக்கு அருள்பொழிவாள். அதனை வைத்து இந்த வருடமும் முழுவதும் பிரச்சினை இல்லாமல் சென்றுவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

thanks sir. Nice info.

KJ said...

thanks sir. Nice info.