Followers

Wednesday, August 28, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்கள் பகுதியில் இன்று ஒரு சுவாராசியமான ஒரு தகவலை தருகிறேன். படித்து பாருங்கள். 

நான் சென்னையில் இருக்கும்பொழுது ஒரு கம்பெனியில் தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. இருவர் போட்டி போட்டுள்ளார்கள். ஒருவர் நல்ல செல்வாக்கு படைத்த நபர். பணபலம் மற்றும் அங்கு பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களின் பலமும் பெற்றவர். ஒன்னொருவர் ஒரளவு பணவசதி மற்றும் செல்வாக்கும் குறைவானர். இருவருக்கும் போட்டி. 

தேர்தல் நடைபெறுவதற்க்கு முன்பு இருவரும் கடுமையாக தேர்தலுக்காக வேலை செய்து இருக்கிறார்கள். தேர்தல் நடைபெறுவதற்க்கு முன்பு பலம் குறைந்தவர் ஜாதகம் பார்க்கலாம் என்று எண்ணி அவரின் நண்பரிடம் கேட்டுள்ளார். அந்த நண்பர் எனக்கு தெரிந்து ஒருவர் இருக்கிறார் அவரை போய் பார்க்கலாம் என்று சொல்லியுள்ளார். அதற்கு அவரும் சம்மதித்து ஒரு நாள் எனனை தேடி நான் இருக்கும் இடத்திற்க்கு வந்துள்ளார்கள். அந்த நேரம் பார்த்து நான் இல்லை அப்பொழுது என்னிடம் செல்போனும் கிடையாது.

இரண்டு நாட்கள் தேடி மூன்றாவது நாள் என்னை பிடித்துவிட்டார்கள். சரி வாருங்கள் என்று உங்களின் ஜாதகத்தை என்னிடம் கொடுங்கள் என்று வாங்கி பார்த்தேன். இவரின் ஜாதகத்தில் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது. இவரின் ஜாதகம் நமக்கு கிடைத்துவிட்டது. எதிராளி யார் அவரின் நிலை என்று பார்க்கவேண்டும் அல்லவா. எதிரியின் ஜாதகம் நம்மிடம் இல்லை. இவரின் ஜாதகம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது. இவரி்ன் ஆறாவது வீட்டை பார்த்தேன்.

ஆறாவது வீட்டை பார்த்துமுடித்தவுடன் எதிரியின் நிலையை பார்த்துவிட்டேன். அவரை இவர் வெல்லவேண்டும். ஆறாவது வீட்டின் காரத்துவத்தை அடிக்க வேண்டும் என்றால் ஐந்தாவது வீட்டை பலப்படுத்த வேண்டும். பூர்வபுண்ணியத்தில் மட்டுமே ஒருவர் வெற்றி பெறமுடியும். பூர்வபுண்ணியத்திற்க்கு ஒரு பூஜை செய்தேன். பிறகு எதிரிக்கு எதிரியாக என்ன இருக்கமுடியும் என்று பார்த்தேன். ஆறாவது வீட்டிலிருந்து ஆறாவது வீட்டை பார்த்தால் அந்த வீடு தான் எதிரியின் எதிரி என்னவாக இருக்கமுடியும் என்று கண்டுக்கொள்ளலாம். லக்கினத்திற்க்கு பதினோராவது வீடு தான் எதிரியின் எதிரி. பதினோராவது வீடு சுக்கிரனின் வீடு. அதில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து அமர்ந்து இருந்தார்கள். எதிரியை அடிக்க பெண்களை வைத்து அடித்துவிடலாம் என்று கணித்தேன்.

அவரை என்றுடன் பிரசாரம் ஒய்வு அடைகிறது என்று கேட்டேன் அவர் தேதியை சொன்னார். அன்றைய நாளில் ஒரு பெண்ணை வைத்து அவருக்கு பிரசாரம் செய்ய சொல்லுங்கள் என்று சொன்னேன். இவரிடம் போட்டி போடுகிறார் அல்லவா. எதிராளி்க்கு இந்த பெண் பிரசாரம் செய்ய சொல்ல அனுப்ப சொல்லிருந்தேன். அதேப்போல் இவர் செய்தார். என்னிடம் வந்தவர் ஐந்து ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்படி என்ன அந்த பெண்ணிடம் இருக்கிறது என்று கேள்வி கேட்கிறீர்களாக. வேண்டாம். நீங்களே தெரிந்துக்கொள்ளமுடியும்.

சோதிடம் என்பது ஒரு வழிகாட்டி. தெரியாத ஊருக்கு போவதற்க்கு ஒரு மேப் போல் நமக்கு உதவும். ஒரு சோதிடனாக இருந்தால் அவனுக்கு கைதேர்ந்த அறிவு வேண்டும். அதனை வைத்து வரும் வாடிக்கையாளர்க்கு அவர்கள் கேட்பதை செய்துக்கொடுக்க வேண்டும். ஜாதகத்தை கையில் எடுத்தால் அப்படி ஒரு கணிப்பு நம்மிடம் இருக்கவேண்டும். கணித்தால் மட்டும் போதாது. அதனை வைத்து எப்படி செயல்படுத்தினால் வெற்றி அடையமுடியும் என்பதையும் பார்க்கவேண்டும்.

நண்பர்களே நாளை நீங்களும் பல பேர்களுக்கு சோதிடம் பார்க்கலாம். ஒரு சோதிடன் பலன் மட்டும் சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. உங்களை நம்பி ஒருவன் வந்துவிட்டால் அவனை காப்பாற்றி அவனுக்கு என்ன தேவையோ அவனுக்கு செய்து கொடுக்கவேண்டும். இவனால் என்ன செய்யமுடியும் என்று மட்டும் நினைக்ககூடாது. நீங்கள் நினைத்தால் எதனையும் செய்யமுடியும் என்பதை நிருபித்துக்காட்டுங்கள்.

மந்திரங்கள் நம்மிடம் இருந்தாலும் அதனை செயல்படுத்த தந்திரம் வேண்டும். மகாபாரத்தில் பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் தந்திரம். அந்த தந்திர வழி எல்லாம் எடுத்து பயன்படுத்தினால் நீங்கள் தான் கிருஷ்ணர்.

நம்பினால் நம்புங்கள்

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: