Followers

Saturday, August 24, 2013

நம்பினால் நம்புங்கள் : விளக்கம்


ஸ்ரவாணி 

நானும் இதைப் பற்றி மிகவும் யோசித்து உண்டு .
தீர்வாக உக்ர தேவதை வழிபாடும் , பிரத்யதிதேவதை வழிபாடும் ,
ஜீவசமாதி செல்லலும் தான் நான் நினைத்தது . நடந்தது .

உங்கள் குரு கூறி இருப்பது அற்புத , புதிய முறை .
நான் இதையே சற்று வேறு விதமாக யோசித்து வைத்து இருந்தேன் .

என்னெவெனில் , ராமர் ஜாதகம் , சீதா ஜாதகம் போல் நம் ஜாதகத்தில் 
பிரச்சனை தரும் கிரஹங்களை மாற்றி எழுதி பூஜை அறையில் வைத்து 
மந்திரம் ஜபித்தல் என்பதே அது .

நீங்கள் விரும்பினால் இதனை தங்கள் வாடிக்கையாளுருக்கும் 
பரிந்துரைக்கலாம் . உளவியல் ரீதியாகவும் நல்ல பலனைத் தரும் என நினைக்கிறேன் .
ஆனால் எந்த ஸ்தானத்தில் மாற்றுவது என்பதை கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும்.
ஆறு என்பதனை விட மூன்று அல்லது எட்டு சரியாக இருக்குமோ என்பது என் தாழ்மையான கருத்தாகும்.


நான் இன்னும் அதனை பல காரணங்களால்
நடைமுறைப்படுத்தவில்லை .

உங்களின் இந்த பதிவு என் எண்ணத்திற்கு உற்சாகம் ஊட்டி 
மறைமுகமாக அதாவது உங்கள் + உங்கள் குருநாதரின் மூலமாக 
எனக்கு அம்மனின் ஆசி கிட்டியது போலுள்ளது.
இனி நான் என் எண்ணத்தை செயல்படுத்த உள்ளேன்.
கடவுள் பச்சைக்கொடி காட்டி விட்டார்.

இது மட்டும் அல்ல . ஜாதக கதம்பத்தில் வரும் 
நிறைய விஷயங்கள் என் எண்ணங்களோடும் ஐடியாக்களோடும் 
ஒத்துப்போகின்றன . 

பகிர்விற்கு கோடானு கோடி நன்றிகள் சார் !

நீண்ட பின்னோட்டத்தை தந்துள்ளீர்கள். நன்றி

நாம் சோதிடத்தை படித்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டே இருக்கலாம். அந்த சோதிடத்தை கொண்டு நமது வாழ்க்கைக்கு என்ன பயன்படுத்திக்கொண்டோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. 

இதனை நாங்கள் வாடிக்கையாளர்க்கு மறைமுகமாக செய்கின்றோம். அவர்களிடம் சொல்லுவதில்லை. எப்படி செய்கிறோம் என்பதை பற்றி மட்டும் வெளியில் சொல்வதில்லை. உண்மையில் உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியில் காட்டகூடாது என்று ஒரு சட்டம் இருப்பதால் இதனை வெளியில் சொல்லுவதில்லை. இப்படி பதிவில் அடிக்கோடிட்டு காட்டும்பொழுது உங்களைபோல் உள்ளவர்களுக்கு ஒரு உற்சாகம் ஏற்பட்டு நீ்ங்களும் சிந்தித்து புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள் என்பதால் வெளியிடுகிறேன்.

சோதிடம் மட்டும் படிக்ககூடாது நமது மதத்தில் இருக்கும் வேதங்கள்,புராணங்கள் மற்றும் உபநிடங்கள் என்று படித்தால் அனைத்தும் எளிதில் விளங்கும். 

கிரகங்களை மாற்றுவது என்பது சிக்கலான ஒரு வேலை சோதிடம் நன்றாக தெரியும் பட்சத்தில் செய்துக்கொள்ளலாம். 

ஒரு தேவதை உங்களிடம் இருக்கும்பொழுது மட்டுமே உங்களால் கிரகங்களை ஆட்டிபடைக்க முடியும். அனைத்திற்கும் அது தேவை. அதனால் தான் அதனை நான் அனைவரிடமும் சொல்லுகிறேன்.

ஜாதககதம்பம் என்பது அனுபவத்தில் உள்ளதை உங்களுக்கு தருகிறது. அதனால் அனைவருக்கும் இது ஓத்துபோகும்.

மொத்தத்தில் சோதிட கிரகங்களை மாற்றுவது என்பது சிக்கல் பிடித்த வேலை. இதனை செய்யும்பொழுது உங்களின் தேவதை உங்களோடு இருக்கும்பொழுது மட்டுமே சாத்தியப்படும். தேவதையின் வழிப்படி செய்தால் நல்லது. 

நாங்கள் அனைத்தையும் செய்வது இந்துமதத்தில் உள்ள விசயங்களை வைத்து தான் செய்கிறோம். புதுமையாக எதனையும் செய்யவில்லை. நமது மதத்தில் இருக்கும் விசயங்களை நாங்கள் நம்பி செய்கிறோம். மதத்தில் ஒன்றும் இல்லை என்றால் உலகம் எப்படி இந்து மதத்தை உற்றுபார்க்கும். முதலில் மதத்தை நம்ப வேண்டும் அதன் பிறகு இது எல்லாம் சாத்தியப்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.   

1 comment:

Anonymous said...

என்னுடைய பின்னூட்டதிற்கென ஒரு தனிப் பதிவு போட்டு இருப்பது
மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது . மிக்க நன்றி !
நீங்கள் சொல்ல வந்த உட்கருத்தும் புரிகின்றது .
எனக்கு இந்த சிந்தனை நான் ஜோதிட வகுப்பு படிக்கும் போதே உதித்தது.

உங்களிடம் தொலைபேசியில் உரையாடியது , சில சந்தேகங்களைத் தீர்த்து வைத்தது
ஆகியவற்றிற்கு என் மனமார்ந்த நன்றிகள் சார் !