Followers

Thursday, August 22, 2013

மனிதர்களின் கீழ்தனமான மனம்


வணக்கம் நண்பர்களே!
                    மனிதர்களின் மனம் எந்தளவுக்கு கீழ்தனமாக சென்றுவிட்டது என்பதை பற்றி பார்க்கலாம்.

என்னுடைய குருநாதரிடம் ஒரு சில பேர் குழந்தை இல்லை என்று கேட்பார்கள் அவரும் அதற்கு வழி செய்துக்கொடுப்பார். இந்த மாதிரி பல பயனாளிகள் பயன்பெற்று இருக்கிறார்கள். இதில் என்ன ஒரு விசயம் என்றால் ஒரு சில பேர் என்ன செய்வது என்றால் குழந்தை உருவாகும் வரை அவரிடம் நட்பு வைத்துக்கொள்வது குழந்தை உருவாகிவிட்டது என்று தெரிந்தால் உடனே அவரின் தொடர்பை துண்டித்துக்கொள்வது. 

இவ்வளவுக்கும் இவர் பணம் என்று வாங்குவதில்லை. இவர் போன் செய்தாலும் அவர்கள் போனை எடுப்பதில்லை.மனிதனின் மனம் அந்தளவுக்கு கீழ்தரமாக சென்றுவிட்டது. ஒரு குழந்தையை குழந்தை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் அவ்வளவு கஷ்டம் இருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு அதனை உருவாக்கவேண்டும். இந்தியாவில் இப்படி செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி இருக்கும்பொழுது இவர்களுக்காக எதனையும் பெறாமல் செய்தால் மனிதர்களின் மனத்தை பற்றி நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

ஒரு சிலரை அறிமுகப்படுத்தினால் அவர்கள் என்ன செய்வது என்றால் அவரை வெளியில் விடாமல் அவர்கள் மட்டும் பயன்படுத்தவேண்டும் என்று நினைத்து பல வேலைகளை செய்திருக்கிறார்கள் அது எல்லாம் இப்பொழுது தான் எனக்கு தெரியவருகிறது. குரு என்பவர் ஆற்று நீர் அந்த நீர் ஒருவருக்கு மட்டும் பயன்படவேண்டும் என்றால் என்ன சொல்லுவது. 

ஏகாப்பட்ட பிரச்சினை இப்படி வந்ததால் அவரை யாரிடமும் அறிமுகப்படுத்த பயமாக இருக்கின்றது.நான் தொழிலுக்கு உதவிச்செய்கிறேன் என்று சொன்னவுடன் குரு சொன்ன வார்த்தை எப்படியும் உன்னை ஏமாற்றுவார்கள் பார் என்றார். நான் அதனைப்பற்றி கவலைப்படவில்லை.செய்துக்கொண்டு இருக்கிறேன்.

அவர் என்னிடம் மேலும் ஒன்றை சொன்னார் முதலில் பணத்தை வாங்கி உனது வங்கி கணக்கில் போட்டு வைத்துக்கொள் அவர்கள் கேட்பதை நாம் முப்பது நாட்களில் நடத்திக்கொடுத்துவிடுவோம். அப்படி நடக்கவில்லை என்றால் முப்பது நாட்களில் திருப்பிக்கொடுத்துவிடு என்றார்.  அவருக்கு பணம் தேவையில்லை எனக்காக அப்படி சொன்னார்.

எல்லாமே இருக்கின்றது ஆனால் பயன்படுத்தும் மக்களுக்கு நல்ல எண்ணம் இருக்கவேண்டும். நீங்கள் என்ன நினைத்தாலும் ஜாதககதம்பம் வழியாக அதிகபட்சமாக சாதிக்கமுடியும். உங்களின் கையில் தான் உள்ளது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: