Followers

Wednesday, August 14, 2013

குழந்தைகளின் ஆன்மீக பாதை


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் தொடர்புக்கொள்பவர்கள் அனேக பேர் எங்களின் குழந்தைகளுக்கு எப்படி ஆன்மீகத்தை கொடுப்பது என்பதை பற்றி அதிகமாக கேட்கிறார்கள். ஒரு சிலர் எங்களின் குழந்தைகள் நாங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் ஆன்மீகத்தை கேட்கவே மாட்டேன் என்று சொல்லுகிறார்கள் உங்களின் அறிவுரை என்ன என்று கேட்கிறார்கள்.

தங்களின் குழந்தைகளுக்கு ஆன்மீகத்தை சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது வரவேற்கதக்க ஒன்று. நீங்கள் சிறுவயதிலேயே ஆன்மீகத்தை சொல்லிக்கொடுத்துவிடவேண்டும். குறைந்தது பத்து வயதிற்க்குள்அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்பொழுது மட்டுமே அனைத்தையும் அவர்களால் எளிதில் புரிந்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கை முழுவதும் அதனை பின்பற்றி நடப்பார்கள்.

நீங்கள் பள்ளிகளை தேர்வு செய்யும்பொழுது இந்து மதத்தினரால் நடத்தப்படும் பள்ளிகளாக இருந்தால் அவர்களுக்கு அந்த பள்ளியில் படிக்கும்பொழுதே சொல்லிக்கொடுத்துவிடுவார்கள்.நீங்கள் சொல்லிக்கொடுப்பதை விட பிறர் மூலம் சொல்லிக்கொடுக்கும் விசயத்தை எளிதில் அவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.

உங்களின் வீடுகளில் விவேகானந்தரின் போட்டோவை மாட்டிவையுங்கள் அவர் சொன்ன கருத்துக்களை உங்களின் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டால் உங்களின் குழந்தைகள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களால் மீண்டு வந்துவிடுவார்கள். உலகத்திற்க்கே ஒரு ரோல் மாடல் விவேகானந்தர். அவரின் கருத்தை மட்டும் ஒருவன் உள்வாங்கி விட்டால் அவனை எந்த ஒரு சூழ்நிலையும் எதிர்கொண்டு நிற்பான்.

உங்களின் வீட்டில் குழந்தைகள் இருந்தால் உங்களின் வீட்டில் விவேகானந்தரின் போட்டோவை வாங்கி அவர்களின் பார்வைக்கு தெரியும்படி வைத்துவிடுங்கள். அந்த போட்டோவை அவர்கள் பார்க்கும்பொழுது அவனுக்குள் மிகப்பெரிய எனர்ஜி உருவாகும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: