Followers

Thursday, August 22, 2013

உணவு


வணக்கம் நண்பர்களே!
                     உணவைப்பற்றி இப்பதிவில் கொஞ்சம் பார்க்கலாம். நாம் உண்ணும் உணவு குரு நண்பன் சகோதரன் சகோதரி மாமனார் மைத்துனர் சித்தப்பா பெரியப்பா அத்தை இவர்களின் வீடுகளைத் தவிர மற்ற இடங்களில் உணவு உண்டால் கர்மவினைகளும் கஷ்டங்களும் அதிகமாகும்.

வீட்டில் சமைத்தால் அந்த உணவினை ஒரு தேவதைக்கு கொடுக்கவேண்டும். விருந்தாளிகளுக்கும் கொடுக்கவேண்டும் அப்படி கொடுக்காமல் சாப்பிட்டால் தரித்திரம் ஏற்பட்டுவிடும்.

உணவை உண்ணும் பொழுது இடது கையை தொடை மேல் வைத்துக் கொண்டால் உண்ட உணவால் காமம் மிகுதியாகும். தரையில் இடது கையை ஊன்றிக் கொண்டு உண்பதால் உடல் மெலிந்து தேக நலம் பாதிக்கும். மலஜலத்தை அடக்கிக்கொண்டும் உண்ணுதல் கூடாது. 

அசைவ உணவை சாப்பிடகூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் இந்த கருத்தில் நான் உடன்படுவதி்ல்லை. குலதெய்வ வழிப்பாட்டை செய்வதால் எனது குலதெய்வத்திற்க்கு அசைவம் கொடுப்பதால் நான் அசைவஉணவிற்க்கு எதிரிகிடையாது. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கால்வாசி கிராமகோவில்கள் அசைவம் படைப்பதால் தமிழனால் அசைவத்தை ஒதுக்கி தள்ளமுடியாது.

என்னை பொருத்தவரை எனது குலதெய்வத்தின் அருள் வேண்டும் என்பதால் அசைவம் சாப்பிடுகிறேன். குலதெய்வத்தின் அருள் இல்லாமல் என்னால் எதுவும் செய்துவிடமுடியாது. அசைவம் சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

அசைவம் சாப்பிடுவர்களின் கவனத்திற்க்கு மீன்களில் கிடைக்கும் சக்தி வேறு எந்த உணவு பொருள்களிலும் கிடைப்பதில்லை என்பதால் மீன்களை அதிகமாக உணவி்ல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.                 

No comments: