Followers

Thursday, August 1, 2013

நீசகுரு


வணக்கம் நண்பர்களே!
                    என்னை நேற்று ஒரு நண்பர் தொடர்புக்கொண்டு பேசி இருந்தார். அவர் என்னிடம் அவரின் சோதிடத்தை அனுப்பி பலனை கேட்ருந்தார். அவர் சொன்னால் ஒரு தேர்வு எழுதினேன் அந்த தேர்வில் வெற்றி பெறவில்லை தோல்லி அடைந்துவிட்டேன். மறுபடியும் தேர்வு எழுதவேண்டும் என்று சொல்லிருந்தார். 

அவரின் ஜாதகத்தை வெளியில் தெரியப்படுத்தகூடாது என்பதால் அதனை வெளியில் வெளியிடவில்லை. ஒரு வெற்றிக்கு பல காரணிகள் ஜாதகத்தில் இருந்தாலும் குரு கிரகம் அதிகம் பங்கு வகிக்கும். அந்த நபருக்கு குரு கிரகம் நீசமாக இருந்தது. நல்ல வாய்ப்பு வருவதற்க்கு குரு கிரகம் அதிகமுக்கியததுவம் பெறுகிறது. ஒருவருக்கு குரு கிரகம் நன்றாக அமையும் பொழுது வாய்ப்புகள் தேடிவரும். அந்த நண்பர்க்கு குரு நீசம் என்பதால் தேர்வில் தோல்வி ஏற்படுகிறது. 

ஒருவர்க்கு குரு நீசம் பெற்று அவருக்கு குரு தசா நடைபெற்றால் காதல் தோல்வி ஏற்படும். திருமணத்திற்க்கு காரகம் வகிக்கும் கிரகம் குரு. குரு நீசமாக இருந்து தசா நடைபெறும் பொழுது காதல் ஏற்பட்டு அது தோல்வியை தந்துவிடும். குரு மகரத்தில் நீசம் என்போம். குரு மகரத்தில் திருவோண நட்சத்திரத்தில் செல்லும்பொழுது மட்டுமே நீசம் அதிகம் ஏற்படும். மகரத்தில் இருந்தால் நீசம் தான். மனதிற்க்கு காரகம் சந்திரன். குரு சந்திரனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில் செல்லும்பொழுது மனதை உடைத்துவிடும். குரு தசாவில் மனது ஒரு வில்லன் போல் செயல்படும். காதல் தோல்விகூட பைத்தியம்போல் மாற்றிவிடும். 

ஒரு காதலில் வெற்றி பெறுவதற்க்கு கூட குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும் இல்லை என்றால் காதல் தோல்வியை தந்துவிடும். குரு கிரகம் எவ்வளவு முக்கியம் என்று தெரி்ந்துக்கொள்ளுங்கள்.நீசகுரு ஒரு மனிதனின் வாழ்க்கையில் அதிக தோல்வியை தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: