Followers

Monday, September 2, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 19


வணக்கம் நண்பர்களே !
                    ராகு தசாவைப்பற்றி பார்க்கலாம். ஒருவருக்கு ராகு தசா நடைபெறும்பொழுது பலன்களை நாம் சொல்லுவதற்க்கு பல வழிகளை சொல்லிக்கொண்டு வருகிறோம். அதில் ஒரு கருத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

ஒரு பாம்பு எப்படி இருக்கும் என்பதை வைத்து கூட ராகு தசாவைப்பற்றி சொல்லலாம். பாம்பின் தலைபகுதியை வைத்து ராகு முதலில் உங்களுக்கு விஷத்தை செலுத்தபோகிறார். முதலில் நீங்கள் கஷ்டத்தை அனுபவிக்கவேண்டும் என்று சொல்லலாம். இல்லை சரியான ஆபத்தில் மாட்டிக்கொள்வீர்கள் என்று சொல்லலாம்.

பாம்போடு தலையில் இருந்து கீழே சென்றால் உடல் பகுதி இருப்பதால் உழன்று செல்லும் நிலைபோல் உங்களின் வாழ்க்கை செல்லும் என்று சொல்லலாம். கடைசியில் வால்பகுதி கேது இருப்பதால் உங்களுக்கு கடைசியில் ஞானத்தை தரப்போகிறார் என்று சொல்லவேண்டியது. இது ஒரு புது மாதிரியான முறை.

அடுத்தது கவனிக்க வேண்டியது. லக்கினத்திற்க்கு முதலில் எது இருக்கின்றது என்று கவனிக்கவேண்டும்.  லக்கினத்திற்க்கு முதலில் ராகு இருந்தால் பாம்பின் தலைவைத்து பலனை சொல்லுங்கள் கஷ்டம் ஏற்பட்டு அதன் பிறகு ஞானம் என்று சொல்லுங்கள். லக்கினத்திற்க்கு முதலில் கேது நின்றால் பாம்பின் வால் என்று கொண்டு ஞானம் ஏற்பட்டு கடைசியில் துன்பம் என்று சொல்லுங்கள்.

மேஷ லக்கினம் என்று வைத்துக்கொள்ளுங்கள் மிதுனத்தில் ராகு நிற்கின்றது என்றால் கஷ்டம் ஏற்பட்டு ஞானத்தை தருவார் என்று சொல்லவேண்டும். அதே மேஷ லக்கினத்திற்க்கு மூன்றில் கேது இருந்தால் ஞானம் ஏற்பட்டு அதன் பிறகு கஷ்டத்தை அனுபவிக்கவேண்டும் என்று சொல்லவேண்டும்.

நீங்களே பல பேரை பார்த்திருப்பீர்கள் நல்ல ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள் அதன் பிறகு அவர்களுக்கு காமம எண்ணம் ஏற்பட்டு அவமானபட்டு செல்வார். அவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்.

நண்பர்களே இந்த பதிவில் சொன்னது எனது அனுபவததில் உள்ளதை சொன்னேன். நடக்கலாம் நடக்காமல் கூட இருக்கலாம். ஜாதகங்களை பார்க்கும்பொழுது கவனித்துப்பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

pratheesh said...

அய்யா நான் இலங்கையில் இருக்கிரேன் கடக லக்கினத்துக்கு 11ல் ராகு றோகினி நட்சத்திரத்தில் உள்ளார் சுக்கிரன் புதனுடன் 2ல் உள்ளார் 5ல் உள்ள செவ்வாய் நேரடியாக ராகுவை பார்க்கிரார் 6ல் குருவும் சந்திரனும், சனி 4ல் உள்ளார் அய்யா எனக்கு ராகு திசை ஆரம்பமாகவுள்ளது பாதக இடத்தில் உள்ள ராகு நன்மை செய்யுமா