Followers

Tuesday, September 3, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 20


வணக்கம் நண்பர்களே!
                    மேலே இருக்கும் ஒரு ஜாதககட்டத்தை கவனித்து பாருங்கள். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருப்பதுபோல் காட்டியுள்ளேன். ராகு தசா நடைபெறும்பொழுது நீங்கள் பலனை சொன்னால் மேஷராசியில் அமர்ந்து இருப்பதால் அது செவ்வாய் போல் செய்யும் என்று சொல்லலாம்.

மேஷ ராசி செவ்வாய்க்கு உடையது அதனால் செவ்வாய்போல் ராகு செயல்படும் என்றும் சொல்லுவார்கள். ராகு சனியைபோலும் செயல்படும் என்றும் சொல்வார்கள். சனியை போல் ராகு செயல்பட்டால் மேஷத்தில் சனி நீசம். நீசமானது போல் தான் நடைபெறும் அது மிகவும் மோசமான பலனை தரும்.

ஒரு தசா நடைபெறும்பொழுது அது எந்த நட்சத்திரத்தில் சென்றது என்ற பார்த்து பலனை சொன்னால் பலன்கள் சரியாக வரும்.

மேஷ ராசியில் 

1.அசுவினி
2.பரணி
3.கிருத்திகை 

இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதோ ஒன்றில் தான் ராகு செல்லபோகின்றது. அந்த நட்சத்திர அதிபதியின் வைத்து ராகு செயல்படும் என்று சொன்னால் பலன்கள் சரியாக வரும்.

ராகு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் சென்றால் அவர் கேதுபோல் செய்ல்பட்டு ராகு தசா பலனை தருவார் என்று சொல்லலாம்.

ராகு பகவான் பரணி நட்சத்திரத்தில் சென்றால் சுக்கிரன் போல் செயல்பட்டு ராகு தசா பலனை தருவார் என்று சொல்லலாம்.

ராகு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் சென்றால் சூரியன் போல் செயல்பட்டு ராகு தசா பலனை தருவார் என்று சொல்லலாம்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: