Followers

Friday, September 13, 2013

எனது நிலைப்பாடு


வணக்கம் நண்பர்களே!
                   . என்னுடைய வேலை என்ன என்றால் என்னிடம் வரும் நபர்களுக்கு பிரச்சினை தீர்த்துக்கொடுக்க வேண்டும் அவ்வளவு தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.  

என்னைப்பொருத்தவரை நான் செய்கின்ற வேலை சரியாக செய்யவேண்டும் என்ற நினைப்பில் தான் இருப்பேன். ஒரு மிடில் கிளாஸ் வகுப்பினர்கள் என்ன கேட்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்வி நன்றாக வாழவேண்டும் கடன் இருக்ககூடாது. என் பையன் அல்லது மகள் நன்றாக வாழ்ந்தால் போதும் எனக்கு ஒரு வீடு அமையவேண்டும் என்று தான் அதிகப்பட்சமான கேள்வியாக இருக்கும். அவர்களின் நியாயமான கேள்விகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்யவேண்டும அவ்வளவு தான் இப்பொழுது இருக்கும் எனது முதல் முயற்சி இதில் வெற்றி பெற்றால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

நேற்றைய பதிவில் சொல்லிருந்தேன். கிராமமக்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு காயத்ரி மந்திரம் கற்று தரவேண்டும் அவர்களின் பிரச்சினை தீர்க்கவேண்டும் அது தான் எனக்கு பிடித்த ஒன்று என்று சொல்லிருந்தேன்.

கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவினாலே போதும். ஆன்மீகத்தில் பெரிய சாதனை எல்லாம் செய்யவேண்டியதில்லை என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் இருக்கும். பெரிய சாதனை எல்லாம் ஆன்மீகத்தில் செய்ய வேண்டும் என்ற நினைத்தது ஒரு காலத்தில் அது போக போக அது வேண்டாம் என்ற நினைப்பு எனக்குள் வந்துவிட்டது. ஏன் என்றால் கீழே இருப்பவனை தூக்குவதற்க்கு எதுவும் இல்லை என்பதை நான் பல விசயங்களில் வழியாக புரிந்துக்கொண்டேன்.

ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தால் தான் அவன் அடுத்தது என்ன என்று நினைக்க தோன்றும். அவன் வாழவே இல்லை என்றால் அவனுக்கு எப்பேர்ப்பட்ட ஆன்மீகவாதி வந்து அவன் முன் நின்றுக்கொண்டு எதனை சொன்னாலும் அவனுக்குள் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை. 

முதலில் வாழ்வதற்க்கு என்ன வழியை நாம் செய்யலாம் என்று எனக்கு தோன்றியது. அவனின் பிரச்சினையை தீர்க்கவேண்டும். அவனை தாக்கும் கிரகதோஷத்தை நீக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு சோதிடனாக இருந்துக்கொண்டு என்ன செய்யமுடியுமோ அதனை செய்கிறேன். 

பல ஆன்மீக செய்திகள் தருவதற்க்கு காரணம் நான் கற்ற விசயத்தை வெளியில் தெரியபடுத்துகிறேன்.அதனை வெளியில் தெரியப்படுத்தும்பொழுது மேல்மட்டத்தில் இருக்கும் நபர்கள் அவர்கள் ஒரு குருவை தேர்ந்தெடுத்து அவர்கள் வழியில் செல்வதற்க்கு ஒரு வழிகாட்டியாக அமையவேண்டும் என்ற நோக்கம் மட்டுமே. நான் சொல்லும் வழி அனைவருக்கும் ஏற்றதாக அமையவேண்டும் என்பதில்லை யாருக்காவது அமையலாம். அமைகின்றவர்களுக்கு பயன்படட்டும்.

எனது குருநாதர் கூட அவரைப்பற்றி எழுதகூடாது போட்டோவை போடாதே என்று சொல்லும்பொழுது அதில் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது என்று தான் அர்த்தம். அவர் சொல்லுவது நல்லதை செய். ஆன்மீக பயிற்சி எல்லாம் கற்று தருகிறேன் என்று சொல்லாதே என்பார். அதில் அர்த்தம் இருக்கின்ற காரணத்தால் மட்டுமே அப்படி சொல்லுகிறார் என்று நினைத்து எதுவும் நான் சொல்லுவதில்லை.  கஷ்டபடுகின்றவர்களுக்கு உதவு அது போதும் என்பார். அதனை தான் செய்ய நினைக்கிறேன். ஆன்மீகப்பயிற்சி செய் என்று சொன்னால் அறிவிப்பு தருகிறேன்.

தற்பொழுது காயத்ரி மந்திரம் மட்டும் தான் நமது ஜாதககதம்பம் வழியாக சொல்லிக்கொடுக்கிறேன். ஆன்மீகத்தில் உயரவேண்டும் என்றால் நீங்கள் காலம் தாழ்த்தாமல் உடனே ஒரு குருவை நாடி அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க என்னை தேடி வாருங்கள். மகான்களை சந்தித்து கேள்வி கேட்பவர்கள் எல்லாம் என்னை தேடி வந்து ஒவ்வொன்றையும் கேட்டால் நான் என்ன சொல்லமுடியும்.பதிவில் வருபனவற்றை படித்துக்கொள்ளுங்கள் அது தான் என்னால் முடிந்த செயல். இல்லறத்தில் இருப்பவர்கள் மற்றும் தொழில் செய்யும் நபர்களுக்கு தான் என்னால் முடிந்த உதவியை தரமுடியும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Anonymous said...

// ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தால் தான் அவன் அடுத்தது என்ன என்று நினைக்க தோன்றும். அவன் வாழவே இல்லை என்றால் அவனுக்கு எப்பேர்ப்பட்ட ஆன்மீகவாதி வந்து அவன் முன் நின்றுக்கொண்டு எதனை சொன்னாலும் அவனுக்குள் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை. //

நானும் உணர்ந்த நிதர்சனமான வாழ்க்கைத்
தத்துவங்கள். படத்தின் தெய்வீகத் தத்ரூபம் மனதைக் கவர்கிறது.
நன்றி !

rajeshsubbu said...

தங்களின் கருத்துக்கு நன்றி மேடம்