Followers

Friday, September 6, 2013

உக்கிரதெய்வம்


வணக்கம் நண்பர்களே!

ஸ்ரவாணி
                    சூரியன் ஆத்மகாரகன் தானே ..
அப்படி என்றால் ஒரு ஜாதகத்தில்
சூரியன் எந்த பாவத்திலும் [ 6 , 8 , 12 -ல் கூட ]
உச்சமோ ஆட்சியோ பெற்றால் அவர்
காளிதேவி , ப்ரத்யங்கிரா தேவி போன்ற
உக்கிர தேவதைகளை நைவேத்திய பொருள்
இன்றி வீட்டிலேயே படங்கள் வைத்து
வழிபடலாமா ?

தாராளமாக வழிபடலாம் ஆனால் இல்லறத்தில் இருந்துக்கொண்டு நீங்கள் ஏன் உக்கிரதெய்வத்தை வணங்கவேண்டும் சாந்தமான அம்மனை வணங்கலாமே. எந்த ஒரு தெய்வத்திற்க்கும் நைவேத்தியம் என்பது மிகமுக்கியமான ஒன்று. மிகப்பெரிய கோவில் கட்டி அதற்கு பூஜை செய்தாலும் அங்கு நைவேத்தியம் என்பது மிக முக்கியமான ஒன்று. கோவில் தானே என்று நைவேத்தியத்தை நிறுத்தமாட்டார்கள். அதற்கு செய்வார்கள். 

நைவேத்தியம் என்பது முக்கியமான ஒன்று. ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நீங்கள் சென்றால் அந்த நிலையில் நைவேத்தியம் முக்கியமாக இருக்காது. அந்த நிலையை அடைவது கடினமான ஒன்று. முதல் நிலையில் நீங்கள் நைவேத்தியத்தை கொடுத்து தான் ஆகவேண்டும்.

அடுத்தது எந்த ஒரு பொருளையும் கொடுக்கும்பொழுது அது வசியமாக தான் இருக்கும். மனிதன் தனக்கு நல்லது செய்யவேண்டும் எனக்கு உனது கருணை வேண்டும் என்று எண்ணி சாம்பிராணி ஊதுவத்தி எல்லாம் ஏற்றி வைக்கிறான். இது எல்லாம் ஒரு வகையான வசியம் தான். எந்த தெய்வத்திற்க்கு எந்த பொருள் ஏற்றது என்றும் கண்டுவைத்திருக்கிறான் அந்த பொருளை கொடுத்து அதனை வசியம் செய்கிறான். 

முதலில் நீங்கள் ஆன்மீகத்திற்க்குள் நுழையும்பொழுது இது எல்லாம் முக்கியமான ஒன்று. நேராக நான் போகிறேன் என்று போனால் ஒன்றும் நிகழாது. இது எல்லாம் கொடுத்த பிறகு படிப்படியாக தன் நிலையை மாற்றவேண்டும். நான் அ வில் இருந்து ஆரம்பிக்க சொல்லுகிறேன். எளிதாக புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Anonymous said...

சரிங்க ! நன்றிங்க !
' அ ' விலிருந்தே ஆரம்பிப்போம்.

antonyarun said...

Dear Thanks for this wonderful article.

What about christian Gods. What is the offering for we give.
Thanks
Arun