Followers

Wednesday, September 4, 2013

சுக்கிரனின் பாதை


வணக்கம் நண்பர்களே!
                    அனைவருக்கும் ஆன்மீகதாகம் இருந்தாலும் இல்லறவாசிகளுக்கு அதிமாக ஆன்மீகத்தின் மேல் ஈடுபடுவதற்க்கு காரணம் என்ன என்று பார்த்தால் ஒன்று புரிந்தது. 

இல்லறவாசி என்று வந்துவிட்டால் அவன் சுக்கிரனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள். சுக்கிரன் அவனை தன்கட்டுபாட்டுக்குள் வைத்து கர்மத்திற்க்குள் அவனை தள்ளுகிறார். சுக்கிரனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றவரை அவன் எப்படி பாடுபட்டாலும் அவனால் ஆன்மீகத்திற்க்குள் வரமுடியவில்லை.

குருவை அடைந்தால் தான் அவன் ஆன்மீகத்திற்க்கு வரமுடியும். இருகிரகங்களும் எதிரி சுக்கிரனின் பிடியில் இருப்பவனை குரு தன்பிடிக்கு இழுக்க முயற்சிப்பார். சுக்கிரன் அவனை விடமால் காமஎண்ணங்களை உருவாக்கிவிடுவான்.

மீண்டும் மீண்டும் இவன் சிக்கிக்கொண்டு வருத்தப்பட்டு கர்மவினையை அனுபவிப்பான். குரு இரக்கப்பட்டு ஆன்மீகஉணர்வை ஊட்டுவார். ஏன் என்றால் ஒவ்வொரு மனிதனும் தன்கடமையை முடித்துக்கொண்டு அவனிடம் சரணடைய வேண்டும் அல்லவா. அதனால் இரக்கப்பட்டு குரு உங்களுக்கு கருணை காட்டுவார். அதனை தடுப்பதற்க்கு சுக்கிரன் வழி செய்வார்.

சுக்கிரனால் மோட்சபாதைக்கு வழி செய்யமுடியாத என்று கேட்கதோன்றும். சுக்கிரனாலும் மோட்சத்தை அடையமுடியும். அதற்கு வழி என்ன என்று நீங்கள் தான் கண்டுபிடித்து அவரின் துணைக்கொண்டு மோட்சத்தை அடையவேண்டும்.

இல்லறத்திற்க்கு எப்பொழுது வந்தீர்களோ அப்பொழுதே உங்களுக்கு குருவின் பலன் குறைய ஆரம்பித்துவிட்டது என்று தான் அர்த்தம். சுக்கிரனின் பலன் அதிகமாகிவிட்டது என்று அர்த்தம். சுக்கிரனின் பலம் கொண்டு தான் நீங்கள் ஆன்மீகவழியை அடையவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

முடியும். வழி இருக்கிறது.
சுக்கிரனால் வரும் செல்வம், வளம்
அத்தனையையும் ஏழைகளுக்கு சேவை செய்து
தொண்டு ஆற்றினால் சுக்கிரனும் மோட்சத்தை
தருவார். நல்லதொரு பதிவு.