Followers

Friday, September 6, 2013

குருவின் அவசியம்


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று பாண்டிச்சேரி சென்று வந்ததால் பதிவு எழுதமுடியவில்லை. இன்று நிறைய பதிவுகளை பார்க்கலாம். பல நண்பர்கள் பல கேள்விகளை கேட்டுள்ளார்கள். ஒவ்வொன்றையும் பதிவு வழியாகவே பதிலை தருகிறேன்.

ஸ்ரவாணி said...
இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் உங்களுக்குக்
கிடைத்திருப்பது போல் ஒரு நல்ல குரு 
கிடைப்பது கடினமே . 
ஜாதகத்தில் குரு நல்ல நிலைமையில் இருந்தாலும் 
அவருக்கும் ஓர் சற்குரு தேவைப்படுமா ?
அவர் நவக்ரஹ குருவை அல்லது தட்சிணாமூர்த்தியை அல்லது 
பிரம்மாவை வழிப்பட்டு தான் விரும்புவதை சுயமாக 
கற்றுக்கொள்ள முடியாதா ?

தங்களின் கேள்விக்கு நன்றி உங்கள் மூலம் பலபேர்க்கு இதனை சொல்லமுடிகிறது. அதாவது ஆன்மீகம் என்று உள்ளே வந்தவுடன் அங்கு நல்லது மட்டும் தான் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டால் அது தவறு. அங்கும் பல வில்லங்கத்தை சந்திக்கவேண்டும். நான் நல்லது நினைத்துக்கொண்டு எதனை செய்தாலும் அதற்கு எதிராக ஒரு குருப் வரும் அவர்களை சமாளிக்க ஒரு குரு உயிரோடு இருக்கவேண்டும்.

நாங்கள் எல்லாம் தொழிலாக செய்துக்கொண்டு இருக்கிறோம். ஒருவருக்கு ஏதோ ஒரு பாதிப்பை ஒருவர் ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் அவரை காப்பாற்ற நான் முயற்சி செய்தால் அந்த பாதிப்பை ஏற்படுத்தி நபருக்கு காப்பாற்ற முயற்சி நடக்கிறது என்று தெரியும். அவன் திரும்பி அடிப்பான். அவன் திரும்பி அடிக்கும்பொழுது யார் அடிக்கிறார்கள் என்று எங்களுக்கு காட்டிக்கொடுப்பது குருநாதர் தான். தற்பொழுது உயிரோடு இருக்கும் குருநாதர்க்கும் தெரியும். அவருக்கு முன்பு இருக்கும் குருநாதர்க்கும் இது தெரியும்.

இந்த நேரத்தில் தெய்வங்கள் சொல்லாது. நமது குருநாதர் தான் சொல்லுவார்கள். நான் இளம்வயதில் இதற்கு வந்ததால் நான் சும்மா இருக்கிறது கிடையாது ஏதாவது வம்பு இழுத்துக்கொண்டு வருவேன். அப்பொழுது எதிராளி ஒரு மாந்தீரிகரை சந்திக்க சென்றால் அவன் யாரை சந்திக்க செல்லுகிறான். எங்கு செல்லுகிறான் என்று குருநாதர் தகவலை தந்துவிடுவார். நான் உஷாராகிவிடுவேன்.

இந்த மாதிரி வேலைக்களுக்கு எல்லாம் ஒரு குருநாதர் பரம்பரை இருந்தால் அவர்களின் உதவி மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனக்கு ஒரு குருநாதர் உயிரோடு இருந்து அனைத்தையும் கொடுத்து இருக்கிறார். அவருக்கு பின்னாடி பல குருநாதர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனை எங்களுக்கு முக்கியமான ஒன்று. 

எந்த ஒரு பிரச்சினையும் கையில் எடுக்கும்பொழுது அவர்கள் அனைவரும் ஆலோசனை மிகப்பெரிய உதவியாக இருக்கும். தெய்வங்கள் ஆலோசனை தராது. எங்களை பொருத்தவரை இப்படி தான். நீங்கள் சுயமாக நிற்க்கும்பொழுது இதனை பெறுவது கஷ்டமான ஒன்றாக இருக்கும்.எந்த ஒரு விசயத்தையும் எடுத்த செல்லும்பொழுது குருநாதர் வழியை சொல்லுவார். தெய்வம் அதனை நிறைவேற்றிக்கொடுக்கும். குருநாதர் இல்லை என்றால் உங்களுக்கு வழி தெரியாது.

எப்படி செய்யவேண்டும் என்று சொன்னால் தான் அதனை செய்யமுடியும் சொல்லுவதற்க்கு ஆள் இல்லை என்றால் எப்படி உங்களால் காரியத்தை நிறைவேற்றமுடியும். நான் தொழில் செய்வது இப்படி தான். எனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டேன். அடுத்தவர்களுக்கு எப்படி என்று எனக்கு தெரியவில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

எனவே பிரச்சினைகளை சமாளிக்க
ஒரு வழிகாட்டி தேவை என்கிறீர்கள்.
பார்ப்போம் எனக்கு குரு தசையில் ஏதாவது
அப்படி அமைகிறதா என்று !?
தனிப்பதிவிட்டு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி !