Followers

Monday, September 23, 2013

படங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     ஜாதககதம்பத்தில் வெளிவரும் ஒவ்வொரு பதிவிலும் அதில் இடப்படும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது நண்பர் ஒருவர் இன்று கேட்டுருந்தார்.

பதிவுக்கு வருபவர்களின் கண்களில் வழியாக அவர்களின் மனதிற்க்கு அமைதி மற்றும் திருப்தி ஏற்படுத்த வேண்டும் என்பதற்க்காக நெட்டில் தேடிபிடித்து படங்களை ஒவ்வொரு பதிவிலும் போடுகிறேன். இந்த படங்கள் யாருக்கும் சொந்தம் என்று சொன்னால் அந்த படத்தை நீக்குவதற்க்கு தயாராக இருக்கின்றேன்.

நெட்டில் தேடிபிடித்து போடுவதால் அந்த படத்திற்க்கு உரிமை யாருக்காவது இருக்கலாம். நெட்டில் தேடும்பொழுது நல்ல படங்களாக எனக்கு கிடைத்துவிடுகிறது. அந்த படத்தின் உரிமையுடன் நீங்கள் கேட்டால் படத்தை எடுத்துவிடுகிறேன். ஒரு சில நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு நீங்கள் போடும் பதிவில் எங்களுக்கு நீங்கள் போடும் படமும் நன்றாக பிடித்து இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்க்காக படத்தை தேர்ந்தெடுத்து போடுகிறேன்.

வயதில் மூத்தவர்கள் நான் போடும் படத்தை பார்த்துவிட்டு மெய் சிலிர்த்து ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வதாகவும் சொல்லுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்க்காகவும் நல்ல படங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

நான் ஜாதககதம்பத்திற்க்கு என்று புதிய தளம் உருவாக்காமல் இருப்பதற்க்கு காரணமும் இந்த படங்கள் தான். ஏன் என்றால் பதிவில் வரும் படங்கள் அனைத்தும் உயர் தரமான தரத்தோடு தரும்பொழுது அதன் சேமிப்பு அதிகமாக இருக்கின்றது. வெப்தளத்திற்க்கு அதிகமான தொகை கொடுக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம். இப்பொழுது இதிலேயே படித்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

M.R said...

உண்மைதான் ஐயா .பார்க்கும் படங்களில் ஒரு சில படங்கள் மனதிற்குள் பரவசமூட்டுகின்றன .
தொடர் பதிவிற்கும் ,தங்களின் சேவை பணிக்கும் மிக்க நன்றி .


தோழமையுடன்
ரமேஷ்

rajeshsubbu said...

வணக்கம் ரமேஷ் தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்.