Followers

Tuesday, September 3, 2013

ஆவணி ஞாயிறு


வணக்கம் நண்பர்களே!
                    முத்துமாரி அம்மன் என்று அழைக்கப்படும் கிராம தேவதையை தெரியாமல் தமிழ்நாட்டில் இருக்கமுடியாது. ஒவ்வொரு கிராமங்களிலும் முத்துமாரி அம்மன் கோவில் கொண்டு இருக்கும். மாரி அம்மன் என்று இருக்கும் அதனை அந்த ஊரின் பெயருக்கு ஏற்ப அல்லது தலவரலாறு ஏற்ப மாரியம்மனை பெயர் சொல்லி அழைப்பார்கள்.

விவசாய தொழில் நடைபெறும் இடத்தில் மாரியம்மன் மிக விஷேசமான வழிபாடாக இருக்கும். மும்மாரி பொழிந்து விவசாயத்தை காப்பாற்றுவாள் என்ற காரணத்தால் மாரியம்மன் வழிபாடு மிக பிரசித்து பெற்ற ஒன்று.

விவசாயியோடு இணைந்த ஒரு தெய்வம் மாரியம்மன். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வத்திற்க்கு அந்த ஊரின் வழக்கத்துப்படி மாதம் மாதம் விஷேசமாக இருந்தாலும் ஆவணி மாதம் மிகவும் விஷேசமான ஒன்று. இந்த ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை விஷேசமான ஒரு கிழமையாகும்.

ஆவணி முதல் தேதியிலேயே சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதனை சொல்லமுடியவில்லை. பழைய பதிவுகளில் இதனைப்பற்றி சொல்லிருந்ததால் விட்டுவிட்டேன். இந்த வாரம் ஆவணி ஞாயிறுக்கிழமை அன்று சென்று வணங்கிவிடுங்கள். இதனை நேற்று சமயபுரம் மாரியம்மனின் படம் ஏதேச்சையாக வந்தது. அப்பொழுதே இதனை எழுதவேண்டும் என்று நினைத்தேன் வேலையால் இன்று எழுதிவிட்டேன். 

முத்துமாரியம்மன் என்பது அம்மை நோயை விரட்டும் சக்தி மாரியம்மனுக்கு இருப்பதால் அதனை முத்து போல் வரும் அம்மையை விரட்டுவதால் முத்து மாரியம்மன் என்று அழைக்கிறார்கள். எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் பெயரும் முத்துமாரியம்மன்.

எது எப்படி இருந்தாலும் ஞாயிறு அன்று சென்று மாரியம்மனை வணங்கிவாருங்கள். குடும்பம் சிறக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: