Followers

Thursday, September 12, 2013

அம்மனின் ஊஞ்சல்


வணக்கம் நண்பர்களே!
                    எந்த அம்மனுக்கும் இல்லாத ஒன்று நமது மேல்மலையனூரில் இருக்கும் அம்மனுக்கு செய்கிறார்கள். அது எதற்கு என்று குருவிடம் கேட்டேன். 

கேட்ட கேள்வி அங்காளபரமேஸ்வரிக்கு மட்டும் ஊஞ்சல் உற்சவம் எதற்கு வைக்கிறார்கள். அமாவாசை அன்று ஊஞ்சல் ஆடவைப்பது மிகப்பெரிய விஷேசமாக இருக்கிறது அது எதற்கு என்று கேட்டேன். புராணங்களில் பல விசயங்கள் சொன்னாலும் எந்த அம்மனிடம் இல்லாத உக்கிரம் அங்காளபரமேஸ்வரிக்கு இருக்கும். அதிக கோபத்தை காட்டாக்கூடிய அம்மன். அந்த கோபத்தை தணிக்க ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி அதனின் கோபத்தை தணியவைக்கிறார்கள்.

அம்மனும் அன்று வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறாள். நினைத்தது நடத்திக்கொடுக்கிறாள். உண்மையில் கடுமையான கோபத்தை கொண்ட அம்மன் தான் அங்காளபரமேஸ்வரி. நான் கூட பல தடவை எதாவது தவறு செய்து மாட்டிக்கொண்டு அடிவாங்கியது உண்டு. சிறிய தவறை செய்து விட்டு சிறிய அளவில் அடி வாங்குவது உண்டு. தவறு என்று தெரிந்தால் அங்கு மன்னிப்பு என்பது கிடையாது. மன்னிப்பு இருப்பதால் தானே மனிதன் தவறு செய்கிறான். 

அந்தளவுக்கு சக்தி நிறைந்த அம்மனை வைத்து தான் நமது தளத்திற்க்கு வரும் நண்பர்களுக்கு பிரச்சினையை தீர்க்கமுடிகிறது. அம்மனினை சாந்தபடுத்தி தான் இதில் வைத்திருக்கிறேன் என்று பழைய பதிவுகளில் சொல்லியுள்ளேன். அதனை சாந்தபடுத்தி உங்களுக்கு நல்ல வழியை ஏற்படுத்தி தருகிறேன். இந்த அம்மனின் அருள் இருப்பதால் மட்டுமே உங்களுக்கு பதிவு தரமுடிகிறது.

நமது ஊரில் இருக்கும் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் கிடையாது. அது எப்படி இருக்கின்றதோ அப்படியே இருக்கும். அதனால் தான் எங்கேயே நீங்கள் இருந்துக்கொண்டு கேட்கும் வரத்தை அது நிறைவேற்றிக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: