Followers

Monday, September 16, 2013

பண்டிகையை கொண்டாடுங்கள்



வணக்கம் நண்பர்களே!
                     இன்று காலையிலேயே எனக்கு ஒரு போன் கால் வந்தது. ஏதோ ஒரு நம்பரில் இருந்து போன் கால் வந்தவுடன் யார் என்று எடுத்து பேசினேன். குரு மறுமுனையில் இருந்து எனக்கு ஓண திருநாள் நல்வாழ்த்துக்களை சொன்னார். குரு இப்பொழுது என்னோடு இல்லை. வெளியி்ல் இருக்கிறார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில காலங்களை வரை நான் பண்டிக்கைக்கு என்று எந்தவித கொண்டாட்டங்களையும் செய்வதில்லை.

எனது குடும்பத்தில் நான் ஒரே பையன். அம்மாவும் அப்பாவும் ஏண்டா இப்படி இருக்கின்றாய் ஜாலியாக இருடா என்று சொல்வார்கள் ஆனால் நான் ஒன்றும் செய்வதில்லை. ஒரு நாள் குரு தான் என்னிடம் சொன்னார். டேய் குடும்பத்தில் இருப்பவனுக்கு முக்கியமான ஒன்று பண்டிகையை கொண்டாடுவது மட்டும் தான். குடும்பத்தில் இருந்துக்கொண்டு சந்நியாசி போல் இருக்ககூடாது. அனைத்து பண்டிக்கையும் நல்ல மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்றார். இந்து மதத்தில் அதிகமான பண்டிக்கை கொண்டாடுவதின் நோக்கமே குடும்பத்தில் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் வைத்துள்ளார்கள் என்றார்.

அதன் பிறகு அனைத்து பண்டிகையும் விடுவதில்லை. ஜாலியாக என்ஜாய் செய்து கொண்டாடுவது வழக்கம். நமக்கு எல்லா மதத்தினர் மற்றும் மாநிலத்தவர்களும் பழக்கம் என்பதால் அவர்களின் பண்டிகையும் விடுவதில்லை. அவர்களின் பண்டிக்கையும் கொண்டாடுவது எனக்கு வழக்கம். ஜாதககதம்பத்தை பல பேர் படிக்கிறார்கள். அவர்கள் இந்து மதம் இல்லாதவர்கள் மற்றும் அண்டை மாநிலத்தவரும் படிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வாழ்த்து தெரிவித்துவிடுவது எனது வழக்கம்.

குடும்பத்தில் இருந்துக்கொண்டு ஒரு சிலர் அப்படியே சந்நியாசி போல் எதனையும் கண்டுக்கொள்ளாமல் இருந்துக்கொண்டு இருப்பார்கள் இது தவறு. குடும்பத்திற்க்கு என்று வந்துவிட்டால் அவர்கள் அனைத்திலும் மகிழ்ச்சியை வெளிப்படு்த்தவேண்டும். அது தான் அவர்களுக்கு சிறந்த ஆன்மீகமாக இருக்கமுடியும்.

இன்று எனக்கு அதிகமான மகிழ்ச்சியை இன்றைய நாள் தருகிறது. அது என்ன என்று சொல்லுகிறேன். அதுவரை பொறுமை காக்கவும்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
                     

No comments: