Followers

Tuesday, October 15, 2013

ஆன்மீக அனுபவங்கள் 122


வணக்கம் நண்பர்களே!
                    ஒருவருக்கு ஆன்மீக தாகம் எடுப்பதற்க்கு முதற்காரணம் மரணம் தான். மரணத்தைப்பற்றி சிந்தித்தால் மட்டுமே ஒருவரால் ஆன்மீகவாழ்க்கையை வாழமுடியும். மரணத்தைப்பற்றி சிந்திக்காதாவரை ஆன்மீகவாழ்வை வாழ்வது என்பது வெறும் கனவு போல் தான் இருக்கும்.

உயிரைப்பற்றி பயம் வேண்டும். நாம் எப்பொழுது சாவபோகிறோம் என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்ள தான் சோதிடத்தை நமது மதத்தில் வைத்திருக்கிறார்கள். சாவைப்பற்றி அறிந்துக்கொண்டுவிட்டால் அந்த மனிதன் என்ன செய்வான். நமக்கு இந்த நாளில் இறப்பு வருகின்றது அந்த நாளுக்குள் நாம் எல்லா நல்லவற்றையும் செய்து வைத்துவிட்டு சென்றுவிடவேண்டும் என்று நினைப்பான். என்று ஒரு மனிதன் மனிதாக மாறுகிறான் என்றால் அவனின் இறப்பை பற்றி அறிந்துக்கொண்ட பிறகு அவன் வாழும் நாட்கள் இருக்கின்றதோ அப்பொழுது மட்டுமே மனிதன் மனிதனாக வாழவான்.

இறப்பைப்பற்றி தெரியாமல் வாழ்கின்றவன் மனிதனாக வாழமுடியாது. உங்களுக்கு அடுத்தவாரம் இறப்பு வருகின்றது என்று உங்களுக்கு தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். இருக்கின்ற ஒரு வாரத்திற்க்கு நீங்கள் என்ன நினைப்பீர்கள் இதுவரை செய்ததை நினைத்துவிட்டு அடடா நாம் போய் இப்படி எல்லாம் செய்துக்கொண்டிருந்திருக்கிறோம். இந்த நாளை இப்படி எல்லாம் செய்திருக்கமுடியும் என்று நினைப்பீர்கள். அந்த நினைப்பு அனைத்தும் நல்லதை மட்டுமே செய்வது போல் இருக்கும். அதனால் தான் மரணத்தைப்பற்றி சொல்ல சோதிடத்தை நமது மதத்தில் வைத்திருக்கிறார்கள்.

எந்த வாழ்க்கை மரணத்தில் முடிகிறதோ அந்த வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கமுடியாது என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். மரணம் இல்லாத ஒரு வாழ்க்கையை மனிதன் வாழமுடியும் என்பதை நமது மகான்கள் மற்றும் சித்தர்கள் எல்லோரும் சொல்லியுள்ளார்கள் அது என்ன என்று தெரிந்துக்கொண்டாலே போதும் உங்களால் மரணத்தை வெல்லமுடியும்.

ஒரு பயிற்சி செய்து பாருங்கள். இன்று இரவு தூங்கும்பொழுது நீங்கள் செத்துவிட்டதாக நினைத்து பாருங்கள். அப்பொழுது என்ன என்ன மனதில் தோன்றுகிறது என்று பாருங்கள் இதுவே நல்ல ஒரு ஆன்மீகப்பயிற்சி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: