Followers

Tuesday, October 15, 2013

பூர்வ புண்ணியம் 55


வணக்கம் நண்பர்களே!
                    எப்படி பலிக்கு பலி நிவர்த்தியாகும் அதற்கு கடவுள் எப்படி துணை புரிகிறார் என்று கேட்க தோன்றும். என்ன செய்வது பகையை வளர்த்துவிட்டால் வேறு என்ன செய்யமுடியும்.

உண்மையில் கடவுள் அப்பாவி. இந்த ஆத்மாக்கள் அடிக்கும் கூத்துக்கள் இவை. முன்ஜென்மத்தில் ஒருவரை நீங்கள் தாக்கிவிட்டால் அந்த நபர் நமக்கு அருகாமையிலேயே பிறக்கவைப்பது கடவுளின் வேலை அல்லது அவர் எங்கு இருந்தாலும் அவரிடம் நம்மை சரியாக சிக்கவைப்பது கடவுளின் வேலையாக இருக்கின்றது.

இந்த எதிரியை நமது ஆறாவது வீட்டை வைத்து தெரிந்துக்கொள்ளமுடியும் ஆனால் ஆறாவது வீடு என்பது எப்படி எதிரி என்றே காட்டுமே தவிர எந்த நேரத்தில் தாக்குவான் என்பதை அந்தளவுக்கு தெரிவிக்காது. ஏன் என்றால் கடவுள் அவனுக்கு சாதகமாக செய்வதால் இந்த ஏற்பாடு நடந்திருக்கும்.  உங்களின் வாழ்க்கையிலேயே பார்த்து இருக்கலாம் சம்பந்தமே இல்லாமல் ஒருத்தன் வந்து உங்களை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கிவிடுவான். இது எல்லாம் விட்ட குறை தொட்டகுறையாக முன்ஜென்மத்தில் இருந்து வந்தது.

ஒருவரை நாம் கொல்லும்பொழுது அந்த ஆத்மா அந்தளவுக்கு கோரமாக மாறுகிறது. அந்த கோரம் தாங்கமுடியாத வேதனையாக ஆத்மாவில் படிகிறது. அந்த கோரத்தை தணித்தால் மட்டுமே அது மோட்சத்தை அடையமுடியும். கடவுள் என்ன செய்கிறார் கோரத்தை தணிக்க மறுபடியும் பிறப்பு எடுக்க வைக்கிறார். பிறப்பு எடுப்பதும் மட்டும் இல்லை. பிறப்பை எடுத்து அவனிடம் சரியாக சிக்கவைப்பதும் கடவுளின் லீலை மட்டுமே.

சட்டம் எல்லாம் நாம் போட்டது மட்டுமே. கடவுளின் சட்டம் வேறு. நாம் போட்ட சட்டத்தில் இருந்து தப்பினாலும் கடவுளின் சட்டத்தில் நாம் சரியான நேரத்தில் மாட்டிக்கொள்வோம். இந்து மதம் என்பது மன்னிப்பை வழங்காது. அது திருப்பி உன்னை அடிக்க வழிவகுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: