Followers

Wednesday, October 16, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய காலகட்டத்தில் ஒரு சினிமா வெற்றி பெறுவது அதன் தரத்தில் மட்டும் கிடையாது. அதன் பிண்ணனியில் ஒரு சில ஆன்மீகவிசயங்களை செய்கிறார்கள். அந்த ஆன்மீகவிசயங்கள் தான் ஒரு படத்தை வெற்றி பெற வைக்க உதவுகிறது.

ஒரு படம் வெற்றி பெறுவதற்க்காக சம்பந்தப்பட்ட நபர் ஒரு ஆன்மீகவாதியை பார்த்து அந்த படத்தை வெற்றி பெற வைக்க தனியாக பூஜை செய்கிறார்கள். அந்த பூஜை மிகவும் ரகசியமாக செய்யப்படுகிறது. அந்த பூஜை செய்யப்படுவதால் படமும் வெற்றி பெறுகிறது. அம்மனோ அல்லது ஏதோ ஒரு தெய்வத்தை வைத்து செய்கின்றனர். 

திரைஅரங்கிற்க்கு வரும் மக்களுக்கு அந்த தெய்வம் ஒரு வித சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. வரும் நபர்களும் அந்த படம் நன்றாக இருக்கின்றது என்று அடுத்த நபர்களுக்கு தெரிவிக்கிறார்கள். உண்மையில் படம் சாதாரணமாக தான் இருக்கும். இந்த பூஜை செய்வதால் அந்த படம் வெற்றிபெறுகிறது.

நீங்கள் இதனை நம்பமாட்டீர்கள் ஆனால் உண்மையாக இது நடத்தப்படுகிறது. ஒரு தெய்வத்தை தன் வசம் வைத்திருப்பவர்கள் செய்யும் செயல் உலகத்தை தன் பக்கம் இழுக்க முடியும். ஒரு சில அரசியல்வாதிகள் கூட முதல்வராக அல்லது சட்டமன்ற உறுப்பினராக வருவதற்க்கு என்று செய்கிறார்கள். மக்களையும் அப்படியே திசை திருப்பிவிடுகிறது அந்த தெய்வங்கள். அவர்களும் வென்றுவிடுகிறார்கள். ஒரு சில அரசியல்வாதியின் ஜாதகத்தை பார்த்தாலே தெரியும். அவர்களுக்கும் அரசியலுக்கு சம்பந்தமே இருக்காது ஆனால் அரசியல்வாதியாக இருப்பார்கள்.

தெய்வம் அனைத்தையும் செய்யும். செய்கின்ற நபர் அந்தளவுக்கு சக்தி படைத்தவனாக இருக்க வேண்டும். அந்த நபர் செய்தால் உலகத்தையே தன் பக்கம் இழுக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: