Followers

Wednesday, October 30, 2013

பண்டிகையில் பிறர்க்கு உதவுவோம்.


வணக்கம் நண்பர்களே!
                    பண்டிகை காலம் இது. அனைவரும் சந்தோஷத்தோடு இருப்பீர்கள். இந்த சந்தோஷமான நேரத்தில் உங்களின் கர்மவினை குறைத்துக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கின்றது. 

நாம் இப்பிறவி எடுத்ததே நமது கர்மவினையை குறைப்பதற்க்கு தான். இந்து மதத்தில் ஏகாப்பட்ட பண்டிகை வைத்ததன் நோக்கமும் இதற்கு மட்டுமே. பண்டிகை வந்தால் கண்டிப்பாக ஏழைக்கு உதவி செய்வார்கள் என்ற நோக்கத்தில் பண்டிகையை வைத்திருப்பார்கள். பண்டிகை வைத்ததில் உள்ள அர்த்தத்திற்க்காகவது நாம் ஏழைக்கு உதவவேண்டும்.

பண்டிகை நேரத்தில் நாம் சந்தோஷமாக இருந்தால் மட்டும் போதாது நம்மை சுற்றிஇருக்கும் ஏழை மனிதர்களையும் நாம் சந்தோஷமாக வைத்திருக்கவேண்டும்.உங்களை சுற்றி இருக்கும் ஏழைக்களுக்கு உதவுங்கள். உங்களால் முடிந்ததை செய்துக்கொடுங்கள். இது உதவது கூட உங்களின் சுயநலத்திற்க்காக மட்டுமே. அந்த மக்கள் சந்தோஷப்படும்பொழுது உங்களின் கர்மவினை குறைக்கிறது.

கர்மவினை குறைந்தால் உங்களுக்கு நல்லது நடக்கும். ஏழைக்கு கொடுக்கும்பொழுது நமது வாழ்க்கையின் தரம் உயரும்.நீங்களே நினைக்கலாம் நாமே இன்னமும் உயரவில்லை எப்படி பிறர்க்கு உதவமுடியும் என்று தோன்றும். நம்மிடம் பத்து ரூபாய் இருந்தால் போதும் அதில் இருந்து ஒரு ரூபாய் பிறர்க்கு கொடுக்கலாம். இதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: