Followers

Thursday, October 10, 2013

நவராத்திரி சிறப்பு பதிவு


ணக்கம் ண்பர்களே!
                    நவராத்திரி சிறப்பு பதிவில் நான் ஏற்கனவே சொன்ன அம்மனை பற்றி தான் சொல்லிவருகிறேன். இப்பதிவில் வக்கிரகாளி அம்மனைப்பற்றி பார்க்கலாம்.

திருவக்கரை வக்கிரகாளி அம்மனைப்பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். காலையில் இருந்து மாலை வரை அம்மனின் சந்நிதி திறந்தே இருக்கும் ஒரு கோவில். இந்த அம்மனை பற்றி கடந்த இரண்டு நாளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் எனது வாடிக்கையார் ஒருவரோடு பேசிக்கொண்டு இருக்கும் ஒரு விசயத்தை உங்களுடன் சொல்லுகிறேன்.

வக்கிரகாளியை ஒவ்வொரு அலங்காரத்திலும் ஒவ்வொரு விதமாக நமக்கு காட்சியளிக்கும். வேறு அம்மன் கோவில்களில் நாம் பார்த்தால் அந்த அம்மன் அனைத்து அலங்காரத்திலும் ஒரே விதமாக தான் காட்சியளிக்கும் ஆனால் வக்கிரகாளியம்மன் ஒவ்வொரு அலங்காரத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சி தரும்.

நீங்கள் திருவக்கிரை கோவிலுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உற்று நோக்கினால் இதனைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். நீங்கள் ஒவ்வொரு கோவில் சென்றாலும் என்ன அலங்காரத்தில் இருக்கின்றது என்பது எல்லாம் உற்றுநோக்கவேண்டும். அம்மனை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகாக இருக்கும். அழகு மட்டுமா சக்தியை அப்படியே காட்டிக்கொடுப்பவள் ஆயிற்றே.

நாம் நினைத்தை நடத்திக்கொடுப்பவள் அல்லவா. வாழ்க்கையில் ஒருமுறையாவது நீங்கள் அங்கு சென்று தரிசனம் செய்யவேண்டும்.கூடிய விரைவில் திருவக்கரை அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருக்கின்றேன். அப்பொழுது பதிவில் தகவலை சொல்லுகிறேன் தவறாமல் நீங்கள் வந்து கலந்துக்கொள்ளுங்கள்.ஞாயிற்றுகிழமையாக பார்த்து வைக்கிறேன் தவறாமல் வந்து கலந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: