Followers

Wednesday, October 9, 2013

கலியுக கதை


ணக்கம் ண்பர்களே !
                    எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அடையாரில் இருக்கின்றார். அவர் குடும்பத்தோடு வசித்து வருகின்றார். அவர் என்னை தொடர்புக்கொண்டு ஒன்றை சொன்னார் அந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

அவர் நடுத்தர குடும்பத்தில் இருந்து இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றார். அவர் திருமணம் செய்துக்கொண்டு குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவருக்கு ஒரு பையன் இருக்கின்றான். அவர் திருமணம் செய்தது அவரின் ஊரிலேயே பெண் பார்த்து திருமணம் செய்துக்கொண்டு சென்னையில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார். என்ன பிரச்சினை என்றால் அவரின் மனைவி அவருக்கு புதுவிதமான ஒரு பிரச்சினையை தருகின்றார்.

அவரின் மனைவியை அவர் வேலைக்கு அனுப்புவதில்லை. வீட்டிலேயே இருக்கின்றார். பிரச்சினை இது தான் வீட்டில் வேலை செய்வதில்லை. குழந்தைகளை ஒழுங்காக பராமரிக்கவில்லை என்கிறார். என்ன செய்கிறார் என்றால் நாள் முழுவதும் கம்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது மட்டுமே வேலையாக செய்துக்கொண்டு இருக்கின்றார் என்றார். 

கேம்ஸ் விளையாட்டில் ஹோட்டல் நடத்துவது அதில் வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது என்று கேம்ஸ் விளையாடுகிறார் என்று சொன்னார். வீட்டில் நான் சாப்பிடுவதற்க்கு உட்கார்ந்து மணிக்கணக்கில் உட்கார்ந்துக்கொண்டு இருக்கின்றேன் கேம்ஸ் விளையாட்டில் வருபவர்களுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருக்கின்றாள் என்றார். 

அவரிடம் இப்படி இருக்ககூடாது என்று சொல்லி புரிய வைக்க அந்த பெண்ணின் அப்பா அம்மாவிடம் சொல்ல சொல்லி உள்ளேன். நமது தளத்திற்க்கு வருபவர்கள் யாராவது இப்படி இருந்தால் தயவு செய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

உங்களின் பொழுதுபோக்கைவிட உங்களின் குடும்பம் முக்கியதுவம் வாய்ந்த ஒன்று.அதனால் மாற்றிக்கொள்வது நல்லது. எப்படி எல்லாம் குடும்பத்தில் பிரச்சினை வருகின்றது பாருங்கள். கலியுகத்தில் இப்படியும் நடைபெறும்.

நீங்கள் மாறவில்லை என்றால் பெருமாள் அவதாரம் எடுத்து வந்து உங்களை காப்பாற்ற வேண்டும். பெருமாள் காப்பாற்ற வரும்பொழுது உங்களின் குடும்பம் இருக்கவேண்டும். குடும்பத்தையும் கவனியுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: