Followers

Thursday, December 26, 2013

பிரச்சினையும் தீர்வும் பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                   ஒரு ஜாதகத்தை நாம் எப்படி சரிசெய்துக்கொடுக்கலாம் என்பதைப்பற்றி இந்த தலைப்பில் பார்க்கலாம். ஏன் என்றால் நமது வேலை வரும் வாடிக்கையாளர்களை எப்படியாவது அவர்களை காப்பாற்றிக்கொடுக்கவேண்டும். நம்மைபோல் அவர்களும் மனிதர்கள் தானே. மனிதனுக்கு மனிதன் உதவி செய்துக்கொடுப்பது ஒன்றும் தவறு இல்லை. 

என்ன கர்மா நமக்கு வந்தால் என்ன நமது வேலையை நாம் ஒழுங்காக செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு இந்த வேலையை இறைவனை நமக்கு கொடுத்திருக்கிறான் என்று எண்ணி செய்துக்கொடுக்க வேண்டியது நமது கடமை.

முதலில் நாம் ஒன்றை சொல்லிவிடவேண்டியது நமது கடமை ஒருவருக்கு வாழ்க்கை பிரச்சினை கொடுப்பதற்க்கு முதல் காரணமாக இருப்பது பித்ருக்களுக்கு ஒழுங்காக திதி கொடுக்காத காரணத்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும். 

இவர்கள் கொடுக்கும் திதி ஒழுங்காக முன்னோர்களுக்கு செல்லுகிறதா என்று பார்க்கவேண்டும். ஏன் என்றால் சில வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள் அப்படி நாய் வளர்த்தால் திதி கொடுத்தாலும் ஒன்றும் புண்ணியம் கிடையாது. நாய் வளர்த்தால் பித்ருக்கள் வரமாட்டார்கள்.

திதி சரியாக கொடுத்தும் ஒன்றும் புண்ணியம் இல்லை என்றால் அடுத்தது அவர்களின் குலதெய்வத்திற்க்கு பூஜை செய்கிறார்களா என்று கேளுங்கள். குலதெய்வத்திற்க்கு பூஜை செய்யப்படவில்லை என்றால் இவர்கள் என்ன தான் தாளம் போட்டாலும் முன்னேற்றம் என்பது சிறிதளவுகூட இருக்காது.

குலதெய்வத்திற்க்கு பூஜை செய்யசொல்லுங்கள். அவர் அவர்களின் குலதெய்வத்திற்க்கு தகுந்தார் போல் பூஜை முறைகள் இருக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே குலதெய்வம் திருப்திப்படும்.

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.