Followers

Tuesday, December 24, 2013

குரு தசா பலன்கள் பகுதி 51


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசா பலன்களில் ஒரு உதாரண ஜாதகத்தைப்பற்றி பார்க்கலாம்.

இந்த ஜாதகத்தில் லக்கினம் ரிஷபம். அதன் அதிபதியான சுக்கிரன் இரண்டாவது வீட்டில் சனியோடு அமர்ந்திருக்கிறார். குரு கிரகம் சொந்த வீட்டில் செவ்வாய் கிரகத்தோடு அமர்ந்திருக்கிறது. குரு தசா இவருக்கு ஆரம்பித்த வருடம் 2003. சுக்கிரனின் வீட்டிற்க்கு குரு தசா அந்தளவுக்கு நன்மையை செய்துவிடாது. ராசியும் லக்கினமும் ஒன்று. இவருக்கு குரு தசா சுயபுத்தியில் மட்டும் நல்லது செய்யாமல் கெடுதலை தந்தது.

சனி புத்தி ஆரம்பித்தவுடன் மிகவும் ஒரு ஏற்றத்தை தந்தது. சனியின் புத்தியில் மட்டுமே இவருக்கு அப்படி ஒரு யோகம். நடத்திக்கொண்டிருந்த வியாபாரம் பலமடங்கு வெற்றி பெற்றது சனிக்கிரகம் இரண்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறது அதனோடு லக்கினாதிபதியும் சேர்ந்து இருப்பதால் நல்ல வருமானத்தை பெற்று தந்தது.

செவ்வாயும் சனியும் பார்வை பெறுகிறது. தசாநாதனோடு செவ்வாய் இருக்கிறது. புத்திநாதனோடு சனி இருக்கிறது. சனி ரிஷபத்திற்க்கு நல்லது செய்வார் என்பதால் கொடுத்திருக்கலாம் அதனை விட தசாநாதனுக்கு சனி நான்காவது வீட்டில் அமர்ந்திருக்கிறது.

தசாநாதனுக்கு நான்கில் அமரும் கிரகத்தின் புத்தியில் மிகப்பெரிய வளர்ச்சியை அந்த கிரகம் கொடுக்கும். சுகத்தை அனுபவிக்க பணம் வேண்டும் அல்லவா. அதனோடு லக்கினத்திற்க்கு இரண்டாவது வீடு என்பது தனவீடு அல்லவா. பணம் வந்துக்கொண்டே இருக்கும் இடத்தில் இருந்து புத்தி நடைபெறும் பொழுது பணம் வந்தது.

அனுபவத்தில் இவருக்கு குரு தசா சனி புத்தியில் கொடுத்தது போல் வேறு எந்த புத்தியிலும் கொடுக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அப்படி ஒரு வளர்ச்சியை புத்திநாதனின் காலத்தில் நடந்து.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: