Followers

Friday, December 20, 2013

வக்கிர குருவின் பாதிப்பு ஆரம்பம்


வணக்கம் நண்பர்களே!
                    குரு கிரகம் வக்கிரமாகி சென்றுக்கொண்டிருக்கிறது.(ஏதோ கிரகங்கள் இப்படி வக்கிரமாகி சோதிடர்களை வாழவைக்கிறது) இதனைப்பற்றி முன் அறிவிப்பை நான் செய்யவில்லை. ஏன் என்றால் கோச்சாரப்பலன்கள் என்பவை ஒரு ஐந்து சதவீதம் மட்டுமே பலன் தரும் என்பதால் எழுதவில்லை. அதோடு எங்கு பார்த்தாலும் இதனைப்பற்றியே எழுதி வருகிறார்கள்.

இப்பொழுது அதிகமாக பாதிக்கப்பட்டு வருபவர்கள் நமது வாடிக்கையாளர்களில் சிம்மம் விருச்சிகம் மற்றும் மீனம் இந்த ராசிக்காரர்கள் அனுபவத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டும் வருகிறார்கள். இதுவரை பாதிக்கப்பட்டு வந்துக்கொண்டிருக்கும் ராசிகளை மட்டும் சொல்லியுள்ளேன்.

என்ன தான் குரு கிரகம் நல்ல கிரகமாக இருந்தாலும் பிரச்சினை என்பது பெரிய அளவில் தான் வந்துக்கொண்டிருக்கிறது. குரு கிரகத்திற்க்கு  பழைய பதிவுகளில் நிறைய பரிகாரங்கள் சொல்லியுள்ளேன். அதனை படித்துவிட்டு அதுபோல் செய்துக்கொள்ளுங்கள். 

பணவிசயத்தில் குரு கிரகம் பெரிய ஆப்பு வைக்கும். பணத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதேப்போல் குரு கிரகம் உடல் நிலையிலும் பிரச்சினை ஏற்பட வைக்கும். சிம்ம ராசியில் உள்ளவர்கள் நிறைய பேர் இப்பொழுது உடல் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பணத்தையும் இழந்துள்ளார்கள். மார்ச் மாதம் வரை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: