Followers

Sunday, December 15, 2013

துர்சக்திகள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு வீட்டிலும் நல்லசக்திகள் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் உள்ளவர்கள் நன்றாக வாழ்வார்கள். அதற்கு மாறாக துர்சக்திகள் வீட்டில் இருந்தால் பிரச்சினை மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடும்.

பெரும்பாலும் நாம் வாஸ்து எல்லாம் பார்த்து கட்டினாலும் அந்த வீட்டில் கூட துர்சக்திகளின் ஆதிக்கம் இருக்கும். அப்படி துர்சக்திகள் ஆதிக்கம் இருக்கும் வீட்டில் என்ன தான் உழைத்தாலும் காசு என்பது தங்கவே தங்காது. வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை பாதிப்படைய செய்யும்.

இது எதனால் ஏற்படுகிறது என்றால் இயற்கையாகவே அப்படி வந்துவிடும். ஒரு சிலர் இந்த மாதிரி ஏதாவது செய்து வைத்துவிடுவார்க்ள். உங்களுக்கு எதிரிகள் இருந்தால் இப்படி செய்து கூட வைத்திருக்கலாம்.

ஒரு சிலர் ஒரு வீட்டில் இருந்து அடுத்தவீட்டிற்க்கு குடிபோகும்போது கூட அந்த வீடு இவர்களுக்கு சரிவராது. புதிய வீட்டிற்க்கு வந்தவுடன் புது புது பிரச்சினை உருவாகும்.

இப்படி உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு நடந்தால் உடனே நல்ல ஆன்மீகவாதிகளை கொண்டு இதற்கு தகுந்த பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள். வாடகை வீட்டில் உள்ளவர்களாக இருந்தால் அந்த வீட்டை விட்டு விட்டு வேறு வீட்டிற்க்கு சென்றுவிடுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: