Followers

Friday, December 20, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்கள் பார்த்து நீண்ட நாட்கள் சென்றுவிட்டது. ஒன்றை பார்க்கலாம்.

ஆன்மீகவாதிகள் என்றால் மிகவும் மென்மையானவர்களாக இருப்பார்கள் என்று மட்டும் நம்பகூடாது. ஏன் என்றால் அவர்கள் செய்யும் கெடுதல்கள் அதிகமாக இருக்கும். ஒரு ஆன்மீகவாதி வெளியில் சென்று பிறர்க்கு வேலை செய்துக்கொடுத்தால் கண்டிப்பாக எதிர்ப்பு என்பது வரும். அந்த எதிர்ப்பை சமாளித்து நின்றுக்கொண்டு இருப்பார்கள்.

எதிரியை இவர்கள் சக்தி வைத்து அடிப்பார்கள். அப்படி அடிக்கும்பொழுது ஒரு சில நேரங்களில் மிகப்பெரிய பாதிப்பும் எதிராளிக்கு வரும். இந்த நேரத்தில் ஒன்றை நீங்கள் நினைக்கலாம். சாதாரண மனிதர் போல் இவர்களும் சண்டைப்போட்டுக்கொண்டால் என்ன அர்த்தம் இவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்று நீங்கள் கேட்கலாம்.

உங்களுக்கும் ஒரு நல்ல வேலை தெரிந்த ஆன்மீகவாதிக்கும் என்ன வேறுபாடு என்றால் நீங்கள் செய்தால் கர்மாவில் மாட்டிக்கொள்வீர்கள். அவர்கள் செய்தால் கர்மாவில் மாட்டிக்கொள்ளமாட்டார்கள். 

நீங்கள் நேரிடையாக சண்டைக்கு செல்வீர்கள். ஆன்மீகவாதி மறைமுக தாக்குதல் தான் நடைபெறும் அந்த மறைமுகத்திலும் அவனுக்கு கர்மா ஏற்படாது. எப்படி என்றால் நான் ஒருத்தரை அடிக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம் நான் நேரிடையாக அடிக்கமாட்டேன். எனக்கு யார் எதிரி இருக்கிறார்களோ அவரை முன் நிறுத்தி அடிப்பேன். வரும் கர்மா எல்லாம் எனது எதிரிக்கு செல்லும். ஒரு சதவீத கர்மா கூட எனக்கு ஏற்படாது. 

நான் முன் நிறுத்துகிற ஆட்களுக்கு இது தெரியாது. எனக்கு மட்டும் இது தெரியும். ஆனால் அவர்களின் கணக்கில் கர்மா ஏறிக்கொண்டே இருக்கும். இப்படி செய்வது எல்லாம் சாதாரணப்பட்ட வேலை கிடையாது. உண்மையில் இப்படி தான் எல்லா வேலையும் செய்வது.

எப்படிப்பட்ட வில்லங்கமான தனம் பார்த்தீர்களா. ஒரு சதவீத கர்மா கூட எங்களுக்கு ஏற்படாது. 

நம்பினால் நம்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: