Followers

Saturday, December 21, 2013

வெற்றியின் ரகசியம்


வணக்கம் நண்பர்களே !
                    நான் நண்பர்களுக்கு போன் செய்வேன் அப்படி செய்யும்பொழுது அவர்கள் போன் எடுக்கவில்லை என்றால் அவர்கள் ஏதோ ஒரு வேலையில் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். நட்பு வட்டத்தில் அவர்களின் வேலை முடிந்தபிறகு என்னை தொடர்புக்கொண்டு என்ன செய்தி என்று கேட்டுக்கொள்வார்கள்.

நான் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஒரு சிலரை தொடர்புக்கொண்டால் அவர்கள் வேண்டும் என்றே போனை எடுப்பதில்லை மீண்டும் கூப்பிடுவதில்லை. எப்பொழுதும் ஒரு வியாபாரத்தில் இருப்பவர்கள் எந்த நேரத்திலும் அவர்களை தொடர்புக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கவேண்டும்.

போனை எடுக்கவில்லை என்றால் ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் எடுக்காமல் இருக்கலாம். அந்த போனை வெவ்வேறு நேரத்தில் போன் செய்தால் அவர்கள் அப்பொழுதும் எடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம் தவிர்க்கிறார்கள் என்று அர்த்தம். 

ஒரு வியாபாரம் செய்பவர் எந்த நேரத்தில் தொடர்புக்கொண்டாலும் அவனை பேசமுடியும் என்ற நிலை இருந்தால் மட்டுமே அவனால் வெற்றி பெறமுடியும். எப்பொழுதாவது மட்டுமே அவருடன் பேசலாம் என்றால் கண்டிப்பாக எதிர்காலத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி அவருக்கு ஏற்படுவது உறுதி.

வாடிக்கையாளருக்கு தான் நாம் தவிர நமக்கு வாடிக்கையாளர் என்ற நிலை எல்லாம் கிடையாது. இதனை படிக்கும் நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு போன் வந்தால் தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் எடுக்கவேண்டியதில்லை மீண்டும் அந்த நபரோடு உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது கூப்பிட்டு பேசிவிடுங்கள். 

என்னை தொடர்புக்கொள்பவர்களுக்கு நான் எப்பொழுது மரியாதை கொடுத்து அவர்களுடன் பேசி விடுவேன். எனக்கு வேலை பளு இருந்தால் போனை எடுக்கமாட்டேன். வேலை முடிந்தவுடன் அவர்களை நானே போன் செய்து பேசிவிடுவது உண்டு.

உங்களோடு எந்தநேரமும் பேசமுடியும் என்ற நிலை இருந்தால் உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை இறைவனே உங்களுக்கு நல்ல வாய்ப்பை தருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: